-->

உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வெள்ளரிக்காய் மருத்துவ குணங்கள்

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

நாம் உண்ணும் உணவில் பெரும்பாலான காய்கறிகளை சமைத்து தான் சாப்பிடுகிறோம்.  அதில் ஒரு சில காய்கறிகளை மட்டுமே பச்சையாக சமைக்காமல் சாப்பிடுகிறோம்.  அதில் முக்கியமான ஒன்று தான் வெள்ளரிக்காய்.

வெள்ளரிக்காய் பயன்கள்
வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்க கூடியது. உடல் சூட்டை தணித்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றுகிறது. குறைவான கலோரி அளவைக் கொண்டுள்ளது. 

வெள்ளரிக்காய்,குளிர்ச்சியானது. வெள்ளரிக்கையை சமைத்தும் சாப்பிடலாம், அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். வெள்ளரிக்காயில் நார்ச்சத்து, நீர்ச்சத்து இரண்டும் அதிக அளவில் நிறைந்துள்ளது. உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை  குறைப்பதில் வெள்ளரிக்காய் சிறப்பாக பணியாற்றுகிறது.

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் அதிகப்படியான வெப்பம்  ஏற்பட்டு கண்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. உடலிற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. வெள்ளரிக்காயில் உள்ள அதிகப்படியான நீர்சத்து உடலில் வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது. இதில் இருக்கும் சத்துகள்  பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதற்கு உதவி புரிகிறது.

வெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள்

வெள்ளரிக்காய் மோர் குழம்பு
  • வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
  • சிறுநீரகம் சம்பந்தமான கோளாறுகளை தடுக்கிறது.
  • 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது.
  • வயிற்றுப்புண் உள்ளவர்கள் தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் குணமடையும்.
  • காலரா நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.
  • வறண்ட தோல், முகத்தில் வறட்சி உள்ளவர்கள் தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் வறட்சித் தன்மை குறைந்து விடும்.
  • வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்.
  • வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின்  நிறைந்துள்ளது.
  • இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் வெள்ளரிக்காயில் நிறைந்துள்ளது.
  • வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் ஒரு துண்டு வெள்ளரிக்கையை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்து வாய் துர்நாற்றம் ஏற்படாது.
  • வெள்ளரிக்காய் ஜீரண சக்தியை தூண்டுகிறது. நாவறட்சியை கட்டுபடுத்துகிறது.
  • உடலில் ஏற்படும் அரிப்பு,சொறி,சிரங்கு,அலர்ஜி போன்ற பாதிப்புகளுக்கு வெள்ளரிக்காய் ஒரு சிறந்த இயற்க்கை மருந்தாகும்.
  • வெள்ளரிக்காய் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
  • வயிறு நிறைய உணவு உண்ட பின் ஓரிரு வெள்ளரிக்காய் துண்டுகளை  சாப்பிட்டு வந்தால் வயிறு உப்பசம் ஏற்படாது.உண்ண வயிற்றுப் பொருமல் நீங்கும்.
  • வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்துசிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
  • வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் தடவி வந்தால் நீர்க்கடுப்பு  ஏற்படாது.
  • தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட அஜீரணம் நீங்கும்.
  • கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு, போன்ற பாதிப்புகளை வெள்ளரிக்காய் உடனடியாக குணப்படுத்திவிடும்.

Previous Post Next Post