-->

ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?

ஒரே ராசி,நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது நல்லதா? கெட்டதா? 

பெற்றோர்கள், தங்களுடைய மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்ய நினைக்கும் போது அவர்களின் மனதில் ஒரு சில சந்தேகங்கள் எழுகின்றன. அதாவது, தங்கள் பிள்ளைக்கு எந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம்? எந்த நட்சத்திரம் என்னுடைய பிள்ளைக்குப் பொருந்தும்? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன. அதே போல அனைத்து பெற்றோர்களுக்கும் காலம் காலமாகத் தோன்றும் சந்தேகம் ஒரே நட்சத்திரம் மற்றும் ஒரே ராசியில் திருமணம் செய்யலாமா என்பதுதான். அதற்கான பதிலை பின்வரும் பதிவில் காண்போம்.

ஒரே ராசி ஒரே லக்னம்

ஒரே ராசி, ஒரே நக்ஷத்திரத்தில் ஏன் திருமணம் செய்யக் கூடாது?

நாம் பிள்ளைகளின் கல்யாணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது எத்தனை பொருத்தம் பெண் மற்றும் பையன் ஜாதகத்தில் ஓத்து போகிறது என பார்போம். பொதுவாக பெண் மற்றும் பையன் ராசிகள் வேறு வேறாகவும், நட்சத்திரங்கள் வேவேறாகவும் இருக்கும். ஆனால் அப்படி இல்லாமல் சில சமயங்களில் இருவருக்கும் ஒரே ராசியாகவோ அல்லது ஒரே நட்சத்திரமாகவோ அமைந்து விடுவது உண்டு.

அப்படி ஒரே ராசியாகவோ, ஒரே நட்சத்திரமாகவோ அமைந்தால் அவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் கொண்ட இருவருக்கு திருமணம் செய்யும் போது கோச்சார நிலைப்படி இருவருக்கும் ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும். உதாரணமாக பையனுக்கு, அஷ்டமத்தில் குரு வந்தால் பெண்ணிற்கும் அந்த நேரத்தில் குரு அஷ்டமத்தில் வரும். இதற்கு காரணம் இருவருக்கும் ஒரே ராசி அல்லது ஒரே நட்சத்திரம். அதே போல குரு பெயர்ச்சியானாலும் சரி, சனி பெயர்சியானாலும் சரி இருவருக்கும் ஒரே சமயத்தில் வரும். நல்லது இருவருக்கும் ஒன்றாக நடந்தால் பரவாயில்லை, ஆனால் தீயது ஒரே நேரத்தில் இருவருக்கும் நடந்தால் பாதிப்புகள் இருவருக்கும் மிக அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் திக்கு முக்காடி போய்விடுவார்கள்.

ஏனெனில் ஆணுக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால் பெண்ணுக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார நிலை இருப்பது மிகவும் அவசியம். அப்போது தான் ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை வழி நடத்துவார். அதை விடுத்து இருவருக்கும் ஒரே சமயத்தில் மோசமான பலன்கள் நடந்தால் குடும்பம் எப்படி சீராக இயங்கும். இதனால் தான் ஒரே ராசியிலோ, ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யக் கூடாது என்றனர் பெரியவர்கள்.
இதில் ஒரு சில விதிவிலக்குகள் உண்டு, அதில் கீழ்காணும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண், மற்றும் ஆணுக்கு ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.

இணைக்கக்கூடிய ஒரே நட்சத்திரங்கள்:


ரோகிணிதிருவாதிரைமகம்அஸ்தம்விசாகம்திருவோணம்
உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் ஆண் மற்றும் பெண்னுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். இவை நல்ல பலன்களை கொடுக்கும். தசா சந்திப்பு தோஷம் உண்டாகாது.

இணைக்கக் கூடாத ஒரே நட்சத்திரங்கள்:

பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்பூரட்டாதி ஆகிய  நட்சத்திரங்கள், பெண் மற்றும் ஆணின்  நட்சத்திரங்களாக வந்தால், திருமணம் செய்யக்கூடாது. சிறிதுகூட பொருத்தம் இல்லை. இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்கக்கூடாது. 

மத்திம பலன்களை தரக்கூடிய நட்சத்திரங்கள்:

பெண் மற்றும் ஆணின்  நட்சத்திரங்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். மொத்தத்தில் திருமணம் செய்யலாம், பாதகம் இல்லை.

அதிலும் ஒரே நட்சத்திரத்தை, சேர்ந்த மணமகள் மணமகன்களுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரத்தின் முந்தைய பாதம் ஆணுக்கும் அடுத்த பாதம் பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். 

உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரம் என்றால், நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆணுக்கும் இரண்டு மூன்று நான்கு ஆகியவற்றில் ஏதாவதொரு பாதம் பெண்ணுக்கு இருப்பது நற்பலன்கள் கொடுக்கும்.
Previous Post Next Post