-->

வெயிலுக்கு குளுகுளுன்னு இருக்க வெள்ளரிக்காய் மோர் குழம்பு


வெள்ளரிக்காய் மோர் குழம்பு 

வெள்ளரிக்காய் செரிமானத்தை அதிகரித்து உடல் சூட்டினால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது. தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் வாய்துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம். வயிற்று புண் உள்ளவர்கள் தினமும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் வயிற்று புண் விரைவில் ஆறிவிடும்.

வெள்ளரிக்காய் கூட்டு

தேவையான பொருட்கள்

  1. தயிர்  - ஒரு கப்
  2. வெள்ளரிக்காய்  - ½ கிலோ
  3. தேங்காய் – ½ மூடி
  4. பச்சை மிளகாய் - 3
  5. சோம்பு  - சிறிதளவு
  6. மிளகாய் வற்றல் – 2
  7. மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்
  8. இஞ்சி  - ஒரு சிறு துண்டு
  9. பூண்டு  - 5 பல்
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - தேவையான அளவு
  12. கடுகு – 1 ஸ்பூன் 
  13. கருவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் தயிரை நன்கு கடைந்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு மிக்ஸியில் தேங்காய் பூண்டு, இஞ்சி, சோம்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
  4. அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து வதக்கவும்.
  5. சிறிது நீர் ஊற்றி வெள்ளரிக்காயை வேக வைக்கவும்.
  6. வெள்ளரிக்காய் வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  7. கொதித்த பின் கடைந்து வைத்துள்ள தயிரை சேர்க்கவும்.
  8. தயிர் சேர்த்தவுடன் கொதிக்க விடாமல் நுரை கட்டியவுடன் இறக்கி விடவும்.
  9. இறக்கியவுடன் சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறினால் சுவையான வெள்ளரிக்காய் மோர் குழம்பு தயார்.



Previous Post Next Post