-->

உடல் பருமன் மற்றும் ஊளைச் சதையை குறைக்க எளிய வழிகள்


உடல் பருமனை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திட சில எளிய வழிகள் 

இன்றைய காலத்தில் ஆண் பெண் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது அதித உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இந்த அதிகப்படியான பருமன் காரணமாக அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடுகிறது. நம்மை யாராவது கேலி, கிண்டல் செய்வார்களோ என வெளியே போவதை தவிர்பவர்களும் உள்ளார்கள். எதனால் இந்த உடல் பருமன் உண்டாகிறது, எப்படி அவற்றை குறைக்கலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம். 


ஆண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் பாஸ்ட் புட், கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள், சரியாக உடற்பயிற்சி செய்யாதது என பல காரணங்கள் உள்ளன.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, உடலுக்கு தேவையான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

உடலில் உள்ள தேவையற்ற ஊளைச்சதையை குறைக்க உடலில் உள்ள திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்து குறைய வேண்டும். ஊளைச் சதையைப்போக்க பல வழிகள் உண்டு. சாப்பாட்டின் அளவைக் குறைப்பதும், கீரைவகை உணவுகளை அதிகமாக சாப்பிட்டும், இறைச்சி வகை உணவுகளை குறைவாக சாப்பிடுவதும், முறையான உடற்பயிற்சி செய்வதுமாகும்.

உடற் பயிற்சி செய்ய இயலாதவர்களுக்கு இவை தவிர எளிய வழிகள் மூலம் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

1. சாதாரண தண்ணீர் குடிப்பதற்குப் பதில் சோம்பு கலந்த தண்ணீரைப் குடித்து வந்தால் உடலில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகள் குறையும்.

2. பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் போன்றவற்றை பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

3. சுரைக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், வெறும் தேநீர் குடிபதற்கு பதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தேநீரை காலையில் குடிக்கலாம்.


4. வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வந்தாலும் உடலில் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

Previous Post Next Post