-->

பரட்டை கீரை மருத்துவ பயன்கள்


பரட்டை கீரை நன்மைகள் 

பரட்டை கீரையானது கீரைகளின் ராணி என்று அழைக்கபடுகிறது. இந்த கீரை ஆங்கிலத்தில் ‘கேல்’ என்று அழைக்கபடுகிறது. இந்த கீரையின் தோற்றமானது தலைவிரி கோலம் போல இருப்பதால் இது பரட்டை கீரை என பெயர் பெற்றது.


குறைந்த அளவு கலோரி, நிறைய நார்ச்சத்து, கொழுப்பு சத்து நிறைந்தது இக்கீரை. மேலும் எண்ணற்ற சத்துக்கள் இந்த பரட்டை கீரையில் அடங்கியுள்ளன. பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் C ஆனது இதில் காணப்படுகிறது. பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் இதில் இருக்கிறது. இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை போன்றே இருக்கும்.

பரட்டை கீரை மருத்துவ பயன்கள்

1. பரட்டைக் கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வர்களுக்கு இதய தசைகள் வலுப்பெறும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாது.
2. உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி பரட்டைக் கீரையை சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடை குறையும்.
3. பரட்டைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைபாடுகள் ஏற்படுவது குறையும்.
4. பரட்டைக்கீரையை தொடர்ச்சியாக எடுத்து கொள்பவர்களுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் ஆபத்து குறைவு.
5. பரட்டை கீரையானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
6. பரட்டைக் கீரையை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டால் குடல்புண்கள் ஆறும், கடுமையான  மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.
7. பரட்டைக் கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு குறைவு. ஏற்கனவே  உருவாகி இருந்தால் இந்த கீரையை எடுத்து கொண்டால் அது கரையும்.
8. பரட்டைக்கீரை எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலுவடையச் செய்யும் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. வாரத்திற்கு 3 அல்லது 4 முறை பரட்டைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும்.
9. பரட்டைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் சுக்கை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் ஒரு கிராம் அளவு குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குணமாகும்.
10. பரட்டைக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஒமம் ஆகியவற்றைச் ஒன்றாக சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள், பெருவயிறு குணமாகும்.

11. பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை இவை மூன்றையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தைலமாக்கித் தேய்த்துவந்தால் கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குணமாகும்.
12. பரட்டைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சி பயன்படுத்தி வந்தால் தோல் நோய்களான படை, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

Previous Post Next Post