-->

மணத்தக்காளி கீரை மருத்துவ பயன்கள்



மணத்தக்காளி கீரை நன்மைகள் 


மணத்தக்காளி கீரையானது ‘சுக்குட்டி கீரை’ எனவும் அழைக்கப்படுகிறது. மணத்தக்களியின் செடியின் கீரை, பழம், வேர், தண்டு, காய் என அனைத்தும் சமையல் மற்றும் மருத்துவம் என இரண்டிலும் பயன்படுகிறது. மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்றும்  அழைப்பதுண்டு. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடிய கீரை இனத்தைச் சார்ந்தது.


மணத்தக்காளி கீரையானது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும். 100 கிராம் மணத்தக்காளி கீரையில் நீர்சத்து 82.1%, புரோட்டின் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%மும் உள்ளன.    

மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்கள்


1. மணத்தக்காளி கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணம் உண்டு.
2. மணத்தக்காளி கீரை கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது.
3. மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும்.
4. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாகும்.
5. மணத்தக்காளி கீரையானது இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
6. மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.
7. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது   மணத்தக்காளி.
8. மணத்தக்காளியின் வேரானது மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
9. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
10. மணத்தக்காளி வற்றலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும்.
11. உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.
12. காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது நல்லது.

Previous Post Next Post