Header Ads

கடலை எண்ணெய் மருத்துவ பயன்கள்


கடலை எண்ணெய் நன்மைகள்

நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலைக்கு கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், கச்சான், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல்வேறு பெயர்கள் உண்டு. சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.

கடலை எண்ணெய் மருத்துவ நன்மைகள்

ஏழைகளின் பாதாம்

இது விலை அதிகமுள்ள பாதாம், பிஸ்தா, முந்திரியை விட அதிகசத்து நிறைந்தது. இது ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது நிலகடலை என ஆய்வுகள் தெரிவிகின்றன.

இதில் அடங்கியுள்ள சத்துகளை தெரிந்து கொண்டதால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தும் உணவுப் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆனால், நிலகடலை அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைப்பதால் இதை அலட்சியப்படுத்தி வருகிறோம்.

நிலக்கடலையில் அடங்கியுள்ள சத்துக்கள்

நிலக்கடலையில் மாங்கனீசு கால்சியம், ஆண்டி ஆக்சிடண்ட், வைட்டமின் இ, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதில் முக்கியமான சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

போலிக் அமிலம்

போலிக் அமிலம் கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கடலை எண்ணையில் போலிக் அமிலம் நிறைந்துள்ளதால், தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நியாசின்

கடலை எண்ணெயில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது.

மன அழுத்தம் போக்கும்

நிலக்கடலையில் டிரைப்டோபீன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.

ஒமேகா 6

கடலை எண்ணையில் அடங்கியுள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவது தவிர்க்கபடுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

பித்தப்பை கல் கரையும்

நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

நல்ல கொழுப்பு

இரத்த அழுத்தம் கடலை எண்ணையில் மோனோசாச்சுரேட்டட் பேட் எனப்படும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது. இந்த கொழுப்பு உடலில் ஓடும் ரத்தத்தின் சீரான ஓட்டத்தை காக்கிறது.

தசைகள் வலிமையாகும்

நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.


நினைவாற்றல் அதிகரிக்கும்

இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கடலை எண்ணெய்

புரோட்டின் நிறைந்தது

கடலையில் அதிகளவு புரோட்டின் நிறைந்து உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி போன்றவையும் நிறைந்துள்ளது. அதாவது, அசைவ உணவு சாப்பிடாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.

எலும்புக்கு வலிமை தரும்

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

இதயம்

கடலை எண்ணையை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த எண்ணையில் இருக்கும் வைட்டமின் இ சத்து இருதயத்தை சிறப்பாக செயல்பட செய்கிறது.

புற்றுநோய்

கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் உள்ளது.
உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்களில் வளரக்கூடிய புற்று நோயை எதிர்த்து கடலை எண்ணெய் சிறப்பாக செயல்புரிவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்று நோய் ஏற்படுவதை தடுப்பதிலும் சிறப்பாக செயல்புரிகிறது கடலை எண்ணெய்.

முதியோர்கள்

வயோதிகம் காரணமாக பலருக்கும் மூளை செல்களின் வளர்ச்சி குன்றுவதால் ஞாபக மறதி, நரம்புகள் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

மூட்டு வலி

முப்பது வயதை கடந்த பலருக்கும் கடின உடலுழைப்பினாலும், உடலின் தேவையான சத்துக்கள் இல்லாததனாலும் உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. சிறிதளவு கடலை எண்ணையை எடுத்து வலி ஏற்படும் மூட்டு பகுதிகளில் நன்கு தடவி, சிறிது நேரம் மெதுவாக பிடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே மூட்டு வலி நீங்கும்.

முதுமை

எல்லோருக்கும் எப்போதும் இளமையான தோற்றத்தில் இருக்கும் ஆசை  இருக்கும். கடலை எண்ணெய் சரியான அளவில் பயன்படுத்தி செய்யபடும் உணவுகளை அடிக்கடி சாப்பிடும் நபர்களின் சருமத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, இளமை தோற்றம் மேலோங்கும்.

சரும நலம்

கடலை எண்ணெயை சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும்.

வயிறு

கடலை எண்ணெய் பெரும்பாலும் அனைத்து வயதினராலும் சுலபத்தில் செரிமானம் செய்யக்கூடிய தன்மை கொண்டது.
இத்தனை சிறப்பு வாய்ந்த கடலை எண்ணையை உபயோகித்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

No comments