-->

நல்லெண்ணெய் உபயோகித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா


நலம் தரும் நல்லெண்ணெய்

எள் என்பது உலகின் பல்வேறு நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் ஒரு தானிய வகையாகும். பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட எள்ளை பயன்படுத்தி பல உணவு வகைகள் தயார் செய்யபடுகின்றன. அந்த எள்ளில் இருந்து தான் நல்லெண்ணெய் தயாரிக்கபடுகிறது. உலகெங்கிலும் இருக்கின்ற மக்கள் தங்களின் அன்றாட உணவு தயாரிப்பில் நல்லெண்ணெய்யை  பயன்படுத்துகின்றனர்.

நல்லெண்ணெய் மருத்துவ நன்மைகள்

நல்லெண்ணெய் உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த நல்லெண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. நல்லெண்ணெயில் முட்டையில் இருக்கும் புரோட்டீனுக்கு சமமான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே உணவில் மற்ற எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, நல்லெண்ணெய்யை சேர்த்தால், இன்னும் பல நன்மைகளைப் பெறலாம்.

தென்னிந்தியாவில் இன்றும் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். தற்போதும் பல்வேறு கிராமப்புறங்களில் நல்லெண்ணையில் சமைக்கும் முறை பழக்கத்தில் உள்ளது. அதில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன.

இதய ஆரோக்கியம்

நல்லெண்ணெயில் சீசேமோல் (sesamol) என்னும் வேதி பொருள் உள்ளது. எனவே இதை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கும்.
வலுவான எலும்புகள் நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருப்பதை உறுதி செய்யும். எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமென்றால் நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு

நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியமானது இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருட்களை எதிர்த்து போராடும். இதனால் நீரிழிவு நோய் வருவது தடுக்கப்படும்.

சுத்தமான பற்கள்

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் (Oil Pulling), பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மலச்சிக்கல் / செரிமான பிரச்சனை

மற்ற எண்ணெய் வகைகளை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசானது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக நடைபெற்று செரிமானப் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

பளபளப்பான சருமம்

நல்லெண்ணெயில் உள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நல்லெண்ணெய் எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும், பளபளப்பாகவும் இருக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்

நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து (LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, நல்லெண்ணெயை சிறிது குடிப்பது போன்றவை செய்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சி அடையும்.

மனநிலை மேம்படும்

நல்லெண்ணெய் மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.

எலும்பு தேய்மானம்

நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் மிகுதியாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை நோயின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

மூட்டு வலி

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம். தினமும் நல்லெண்ணையில் மசாஜ் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

கண்கள் ஆரோக்கியம்

நல்லெண்ணெய் நன்மைகள்

நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் உஷ்ணம், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை குணமாகும். கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் கெடும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

தூக்கமின்மை

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பொடுகு தொல்லை

பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை இருக்காது.
Previous Post Next Post