Header Ads

விளக்கெண்ணெய்யின் மருத்துவ பயன்கள்


விளக்கெண்ணெய் மருத்துவ பயன்கள்

விளக்கெண்ணெய் (castor oil) ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை தாவர எண்ணெய் ஆகும். இது மற்ற எண்ணெய்களை விட அதிக அடர்த்தி கொண்டது. எனவே சற்று பிசுபிசுப்புடன் இருக்கும். விளக்கெண்ணெய் குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவப்பயன்கள் நிறைந்தது. மருத்துவத்தில் பேதி மருந்தாகப் பயன்படுகிறது.

விளகெண்ணை பயன்கள்


விளக்கெண்ணெய் ஒரு அறிய மருந்தாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் மாதத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். காரணம் இதில் இல்லாத நன்மைகளே இல்லை எனலாம். விளக்கெண்ணெய் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது
நம்முடைய முன்னோர்கள் விளக்கெண்ணையை பல உடல் நலப் பிரச்சினைகளுக்கான தீர்வாகப் பயன்படுத்தினார்கள். அதிலும் உடலில் உள்ள  தேவையற்ற நச்சுக்களை சுத்தம் செய்வதற்கும், உடல் சூட்டைத் தணிப்பதற்கும் முதல் கருவியாக விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதில் ஆன்டி மைக்ரோபியல், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், மலமிளக்கி தன்மை இருப்பதால் எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. அதனால் தான் இதை அழகு சாதனப் பொருட்கள், ஷாம்பு, கண்களுக்கு மருந்தாக விளக்கெண்ணெய்யை பயன்படுத்தி வருகின்றனர்.

விளக்கெண்ணெய்யில் ரிங்கினெக்கிக் அமிலம், மோனோசேச்சுரேட் கொழுப்பு அமிலம் ஆகியவற்றை கொண்டுள்ளது. விளக்கெண்ணெய்க்கு மணம், சுவை என்று எதுவும் கிடையாது. இது பூஞ்சை மணம் உடையது. இந்த விளக்கெண்ணெய்யில் உள்ள காம்டோஜெனிக் அமிலம் நம் சருமத்திற்கு நல்லது என்றும் இதை முகத்திற்கு அப்ளை செய்தால் சரும துளைகளை போய் அடைக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மலச்சிக்கலை போக்கும்

விளக்கெண்ணெய் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இதற்கு அதன் பிசுபிசுப்பு தன்மையே காரணம். இதை 15 ml லிட்டர் அளவில் குடித்து வந்தால் இறுகிய மலத்தை இலகுவாக்கி வெளியே தள்ளுகிறது. ஆனால் அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில் இது குடல் தசைகளை வேகமாக்கி வயிற்றுப்போக்கு ஏற்படுத்திவிடும். இந்த எண்ணெய்யை அளவுக்கு அதிகமாக அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது, மாதம் ஒரு முறை உபயோகிப்பதே சிறந்தது.

சருமம் சுருங்குவதை தடுக்கிறது


நம் சருமம் சுருங்க காரணம் சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவது தான். சருமம் சுருங்குவதால் இளவயதிலேயே வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் விளக்கெண்ணெய்யை பயன்படுத்தும் போது அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. எனவே தினமும் காலையில் கண்கள், வாய், கன்னம், கழுத்து போன்ற பகுதிகளில் விளக்கெண்ணெய்யை தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவி விடுங்கள். உங்க சருமம் இளமையாக இருக்கும்.

பிரசவத்தை தூண்டும்


கர்ப்பம் தரித்த பெண்களுக்கு பிரசவத்திற்கு குறித்து கொடுத்த நாட்களிலிருந்து இடுப்பு வலி ஏற்படாமல் பிரசவம் தள்ளிப் கொண்டே போகும். இதனால் அந்த பெண்களுக்கு மனதில் ஒரு வித பயம் தோன்றும். அது போன்ற சமயங்களில் அந்த பெண்களுக்கு விளக்கெண்ணெய் ஒரு சிறந்த தீர்வு. இது மலமிளக்கி என்பதால் குடலை முழுவதுமாக சுத்தப்படுத்தி வெளித் தள்ளுகிறது. விளக்கெண்ணெய் குடித்த 24 மணி நேரத்தில் பிரசவ வலி வர அதிக வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுக்கும் வயிற்றில் உள்ள   குழந்தைக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.


மூலநோய்கள்


மலத்தை அழுத்தி வெளியேற்றும் போது மலவாய் பக்கத்தில் உள்ள இரத்த குழாய்கள் வீங்க ஆரம்பிக்கும். இதனால் மலவாயில் இருந்து இரத்தம் கசிய துவங்கும். பிறகு நீங்கள் மலம் கழிக்கும் போது இரத்தத்துடன் மலம் வெளியேற ஆரம்பிக்கும். இந்த மூலநோய் பிரச்சனையை ஆமணக்கு விதைகள் மற்றும் விளக்கெண்ணெய் கொண்டு எளிதாக சரி செய்யலாம். வெளிமூலம் மற்றும் உள் மூலம் இரண்டுக்குமே விளக்கெண்ணெயால் தீர்வு கிடைக்கும்.

மருக்கள் நீங்க


தினமும் மருக்களின் மீது விளக்கெண்ணெய் தடவி வந்தால் கொஞ்ச நாட்களில் அவை காய்ந்து உதிர்ந்து விடும். மேலும் பூண்டு பல்லை எடுத்து அதையும் மருக்களின் மேல் வைத்து வர உதிர்ந்து விடும். இதை ஜோபோபா மற்றும் கடுகு எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து முடிக்கு தேய்த்தால் இளநரை கருப்பாகும் என்று கூறப்படுகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த விளகெண்ணையை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

No comments