-->

கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள்


கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. கடுகு இல்லாத தென்னிந்திய சமையலை பார்க்கமுடியாது. ஆனால் இன்றைய தலைமுறையினர் சாப்பாட்டில் கடுகு இருந்தாலே தள்ளி வைத்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே கடுகை உணவுடன் எடுத்து கொள்ள இயலாதவர்கள் கடுகு எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் கடுகின் பயன்களை முழுவதுமாக பெற இயலும்.

கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள்


கடுகில் உள்ள சத்துக்கள்

கடுகில் கல்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், தாது உப்பு, வைட்டமின்கள், ஆக்சிடெண்டுகள், சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற சத்துக்கள் உள்ளன.

கடுகின் மருத்துவ பயன்கள்

இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெய் பரவலாக பயன்படுத்தபடுகிறது.

1. கடுகு எண்ணெய் பூஞ்சை தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், ஜலதோசத்தை குணப்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், வாய்வழி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கவும் மற்றும் இன்னும் பல அசாதாரண மருத்துவ குணங்களை கொண்டுள்து.

2. சமையலை தவிர கடுகு எண்ணையானது காய்கறி சாலட்களிலும், குழந்தைகளின் மசாஜ் எண்ணெயாகவும், தலையில் தடவும் எண்ணெயாகவும், முகம் மற்றும் உடலில் தடவவும் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது.

3. கடுகு எண்ணெய் சருமத்துக்கு இயற்கையான சன் ஸ்கிரீனாகப் பயன்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதோடு, முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் நீக்கும்.
4. கடுகு எண்ணெயையும், தேங்காய் எண்ணெயையும் சம அளவில் கலந்து, உடல் மற்றும் முகத்தில் தடவி விட்டு, நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்புடனும் இருக்கும்.
5. தினமும் காலையில் குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடம் முன்பும், இரவில் தூங்குவதற்கு முன்பும் உதட்டில் கடுகு எண்ணெயை தடவி வந்தால், உதடுகளின் கருமை நிறம் மாறுவதோடு, மென்மையாகவும் மாறிவிடும்.
6. கடுகு எண்ணெயை சம அளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வர, தலைமுடி நீண்டு அடர்த்தியாக வளரும். தலைமுடிக்கும் சருமத்துக்கும் மட்டுமல்லாமல் பற்களையும் பளிச்சென சுத்தமாக வைத்திருக்கவும் கடுகு எண்ணெயைப் பயன்படுத்தலாம். 
7. சருமத்தை இயற்கையான முறையில் சுத்தம் செய்யும்  ஒரு கிளன்சராக கடுகு எண்ணெய் பயன்படுகிறது. கடுகு எண்ணெயை இரவு தூங்கும் போது தலையி்ல் தேய்த்து, வரவேண்டும். கடுகு எண்ணெயானது தலைமுடியின் வேர்க்கால்களுக்குள் சென்று, முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கடுகு எண்ணெயைத் தொடர்ந்து தலைமுடிக்கு தேய்த்து வந்தால் இளநரையை ஏற்படாது, மேலும் முடி  உதிர்தலையும் கட்டுப்படுத்தும்.
8. பல் துலக்குவதற்கு முன்பு, கொஞ்சம் கடுகு எண்ணெயை வாயில் ஊற்றி, சிறது நேரம் வைத்திருந்து கொப்பளித்தால், பற்களில் உண்டாகும் நோய் தொற்று, ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் கசிதல் போன்றவை சரியாகும்.
9. பற்கள் பளிச்சென மின்னவும், பற்களில் உள்ள கறைகள் நீக்கவும், பல் தேய்த்து முடித்தவுடன் சிறிது கடுகு எண்ணெய், நான்கு துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து, வாயில் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை வைத்திருந்து, வாய் கொப்பளிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.


Previous Post Next Post