-->

அன்ன தோஷம் என்றால் என்ன? அது யாருக்கெல்லாம் ஏற்படும்? பரிகாரம் என்ன


வாழ்வை வெறுமையாக்கும் அன்ன தோஷம்

ஒரு சிலருக்கு கோடி, கோடியாய் பணம் இருக்கும், ஆனால் உடலில் ஏகப்பட்ட வியாதிகள் குடி கொண்டு இருக்கும். திருப்பதிக்கே சென்றாலும் அவர்களால் நிம்மதியாக ஒரு லட்டு வாங்கித் திங்க முடியாது. இன்னும் ஒரு சிலருக்கு 'வேளைக்கு ஒரு கலசம் கஞ்சி தான்' சாப்பிடவேண்டும் என்று மருத்துவர் சொல்லி விடுவார்.

அன்னதோஷம்

இன்னும் சில கோடீஸ்வரர்கள் உணவு உண்ண உட்காரும் சமயத்தில் வீட்டில் சண்டை ஏற்பட்டு மனதில் நிம்மதி பறிபோய்விடும். இதனால் உணவு உண்ணவே பிடிக்காது. கோடிக்கணக்கில் காசு இருந்தாலும் வாய்க்கு ருசியாக சாப்பிட முடியாது. இதனால் ஏன் இந்த வாழ்க்கை? என்று கலங்கி போவார்கள்.

ஏழைகள் நிலையோ இன்னும் பரிதாபம், பசி இருக்கும். வீட்டில் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடவும் ஆள் இருக்கும். உடல் ஆரோக்கியமும் இருக்கும். ஆனால் கையில் காசு இருக்காது. வாழ்க்கை எப்போதுமே 'போதவில்லை' என்கிற நிலையைத் தான் தொடர்ந்து தந்திருக்கும். அதிலும் ஒரு மிகப் பெரிய தரித்திர நிலையையே அவர்கள் அடைந்து இருப்பார்கள்.

மேற்கண்ட இது போன்ற நிலையை தான் சாஸ்திரங்கள் 'அன்ன தோஷம்' என்கின்றன. இந்த தோஷத்திற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாது. இந்த தோஷம் ஒருவருக்கு வந்து விட்டால் வயிறு எப்போதுமே வாடிய நிலையில் தான் காணப்படும். முகம் பொலிவிழந்து விடும். மனதில் எப்போதும் சோகம் குடிக்கொண்டிருக்கும்.


எதனால் இந்த தோஷம் வருகிறது?

எதனால் இந்த தோஷம் ஒருவருக்கு வருகிறது என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

1. ஏழை, எளியவர்கள் பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்கள்.

2. வீட்டில் கர்ப்பிணிப் பெண்கள் பசியாக இருக்கும் சமயத்தில் தாங்கள் மட்டும் சாப்பிடுபவர்கள்.

3. பிறரை சாப்பிடகூட விடாமல் பசிக்கப் பசிக்க வேலை வாங்குபவர்கள்.

4. உணவு சாப்பிட அமர்ந்தவர்களை சாப்பிட விடாமல் சண்டை போட்டு விரட்டி அடிப்பவர்கள்.

5. போதுமான் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள் அல்லது உணவை குப்பையில் அடிக்கடி கொட்டுபவர்கள்.

6. சிறு குழந்தைகளை பார்க்க வைத்துக் கொண்டு தான் மட்டும் சாப்பிடுபவர்கள்.

என மேற்கண்ட அனைவருக்கும் அன்ன தோஷம் ஏற்படும்.

அன்ன தோஷத்திற்கான பரிகாரம்


வெள்ளிக் கிழமைகளில் பால் நிவேதனம் செய்து வெள்ளை மலர் கொண்டு அன்னை அன்னபூரணியை வழிபட்டு வாருங்கள். இயன்ற மட்டும் ஏழைகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு அன்ன தானம் செய்யுங்கள். இதனால், இத்தோஷத்தில் இருந்து சீக்கிரத்தில் விடுபட இயலும். 

Previous Post Next Post