-->

பார்லி அரிசியின் மருத்துவ பயன்கள்


பார்லி அரிசி

மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளில் பார்லி அரிசியும் ஒன்று. இது பெரும்பாலும் நம் நாட்டில் கஞ்சியாக தயார் செய்து சாப்பிடப்படுகிறது. இது ஒரு அற்புதமான சத்துப்பொருள் ஆகும். இது வாற்கோதுமைஎன்றும் அழைக்கபடுகிறது. இந்த பார்லியை  டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்று அனைவரும் தினமும் சாப்பிட்டு வரலாம்.

பார்லி மருத்துவ பயன்கள்


பார்லி புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். ரஷ்யா, கனடா போன்ற நாடுகளில் அதிகம் பயிரிடபடுகிறது. மத்திய ஆசிய நாடுகளில் அதிக மக்களால் உண்ணப்படும் உணவு தானியமாக பார்லி அரிசி இருக்கிறது.

பார்லியில் நார்ச்சத்து, வைட்டமின் பி, புரோட்டீன், கொழுப்பு சத்து, சுண்ணாம்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்து போன்றவை அடங்கியுள்ளது.

பார்லியின் மருத்துவ பயன்கள்

எடையை குறைக்கும்

பார்லியில் பீட்டா க்ளூக்கோன் என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இந்த பீட்டா க்ளூக்கோனானது, உடலில் உள்ள பித்த நீருடன் சேர்ந்து, தேவையற்ற கொழுப்பை மலம் மூலமாக வெளியேற்றும். எடைக் குறைக்க வேண்டும் என்று நினைபவர்களுக்கு பார்லி சிறந்த உணவாகப் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இதய நோயாளிகளுக்கு நல்லது

இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான ஒரு உணவாகும். இது உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதால், இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ப்ரோபியானிக் என்கிற அமிலம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது

கருவுற்ற பெண்கள் பார்லி கஞ்சி தயார் செய்து தினமும் அருந்தினால் உணவுகள் எளிதில் செரிமானம் ஆகும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், நீரிழிவு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். கை, கால் போன்றவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கும். மேலும் கருவுற்ற பெண்களின் இரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மை படுத்துகிறது.

காய்ச்சலை குறைக்கும்

நம் உடலி உள்ள நிணநீர் என்னும் சுரப்பிகள்தான், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்கிறது. அது அடைக்கப்பட்டால் உடலில் உள்ள தேவையற்ற தண்ணீர் வெளியேற வழியின்றி உடலில் அப்படியே தேங்கிவிடும். இதனால் காய்ச்சல் உண்டாகும். இவ்வாறு தேங்கிய நீரை  வெளியேற்ற பார்லி கொடுக்கப்படுகிறது. இந்த நீர் வெளியேறினால் காய்ச்சல் குறைய தொடங்கும்.

புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்

பார்லியில் எல்லா வகையான புற்றுநோய்களையும் தடுக்கக்கூடிய ஆற்றல் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பார்லியை உணவாக அதிகம் பயன்படுத்தும் சீனாவில் உள்ள யுனான் மற்றும் திபத்திய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்று நோய் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுப்பதுடன், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக பார்லி செயல்படுகிறது.

நார்சத்து அதிகம் கொண்டது

கோதுமையிலும், ஓட்ஸிலும் அதிக நார்ச்சத்து இருந்தாலும் அவை தயாரிக்கும் பொழுது நார்ச்சத்து ஓரளவு குறைந்து போகின்றன. ஆனால் பார்லியில் பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை. இது உடம்பில் இருக்கிற சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

எலும்பு, மற்றும் பற்கள் வலிமை பெரும்

பார்லியை தானியத்தை சாறு போன்று செய்து தினமும் குடித்து வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடையும். மேலும் வயதானவர்களுக்கு வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் குறைகின்றன.
பார்லி என்றால் என்ன

செரிமான கோளாறுகள் தீரும்

செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த பத்திய உணவு பார்லி ஆகும். பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவையோ அல்லது பார்லி கஞ்சியோ தயாரித்து பருகுவது வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.

பித்தப்பை கற்கள்

நமது உடலில் பித்தப்பையில் ஏற்படும் அதிகமான அமில சுரப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அதிகரிப்பால் பித்தப்பையில் கற்கள் உருவாகிறது. பெண்களுக்கு இந்த பித்தப்பை கற்கள் உருவாகும் சதவீதம் அதிகம். பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவு பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரியான அளவில் உள்ளது. இதனால் பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
தினமும் பார்லியை உட்கொண்டு வந்தால் உடலில் ஊட்டச்சத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இந்த பார்லி இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்கும். மேலும் இந்த பார்லி அரிசி கஞ்சி சிறுநீரகத்தின் செயலாற்றலை ஊக்குவிக்கும்.


Previous Post Next Post