-->

தைலக்காப்பு என்றால் என்ன? தைலக்காப்பு ஏன் செய்யப்படுகிறது? தைலகாப்பின் பலன்கள்


தைலக்காப்பு

கடவுளுக்கு எத்தனையோ அபிஷேகம், காப்புகள் செலுத்தி பார்த்திருப்போம். அதில் ஒன்றுதான் தைலக்காப்பு. தெய்வ சிலைகளுக்கு மணம் மிகுந்த எண்ணெயைத் தடவிச் செய்யும் பூஜைக்கு பெயர்தான் ‘தைலக்காப்பு’ என்று பெயர். அந்த சிவபெருமானுக்கு வாசனைத் திரவியங்களை கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதைக் விடவும் அதிகம் விசேஷம் நிறைந்தது தைலக்காப்பு ஆகும்.

தைலகாப்பு என்றால் என்ன


தைலக்காப்பு ஏன் செய்யப்படுகிறது


கோயிலில் உள்ள மூலவருக்கு தைலக்காப்பு சாற்றுவதால் அந்தக் கோயில் விக்ரகங்கள் மாசு, மருக்களாலும், காலத்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அழியாது. இதனால்தான் முதலில் தைலக்காப்பு சாற்றப்படுவது இன்றைய காலத்தில் பல கோயில்களில் வழக்கமும் ஆகி விட்டது.

பிள்ளையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். அந்த வகையில், கடவுள் விக்கிரகங்களை பக்தர்கள் குழந்தையாய், மணாளனாய் பாவிப்பதால் தான் ஊஞ்சலில் வைத்தும், திருக்கல்யாணம் செய்தும் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர். இதே வகையில் கடவுளுக்கு உடல் ரீதியாக எந்த ஒரு பாதிப்பும்  வந்து விடக்கூடாது என்ற குழந்தைத் தனமான பக்தியாலேயே தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

தைலக்காப்பு எதை கொண்டு செய்யப்படுகிறது

தைலக்காப்பில் பச்சை கற்பூரம், லவங்கம், ஏலக்காய், சாம்பிராணி, சாதிக்காய், வெட்டி வேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி வடிகட்டி, அந்த தைலம் தான் கடவுள் விக்கிரகம் மீது பூசப்படுகிறது. பொதுவாக ஒரு சிலைக்கு தைலக் காப்பு என்றால் இப்படி தான் செய்து பூசப்படுவது வழக்கம். அறிவியல் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பார்த்தோம் என்றால் இந்த தைலக் காப்பானது சிலையை மேலும் வலுவானதாக ஆக்கும்.

தைலக்காபின் பயன்கள்


தைலக்காப்பின் பயன்கள்

கடவுள் விக்கிரங்களுக்கு சாற்றப்படும், தைலக் காப்பில் இருக்கும் வாசனை திரவியங்கள் மற்றும் மருத்துவ மூலிகைகளை விக்கிரகங்கள் உள்வாங்கி கொண்டு பாதுகாப்பாகப் பல நாட்கள் எந்த சிதைவும் ஏற்படாமல் அதே மெருகுடன் எப்போதும் காட்சி அளிக்கிறது. சில நாட்கள் கழித்து அந்த விக்கிரகத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு அந்த தீர்த்தம் பக்தர்களுக்கு அளிக்கப்படும் போது, பக்தர்களின் நோயும் தைலக்காப்பில் உள்ள மூலிகையின் தாக்கத்தால் நீங்குகிறது. இப்படியாக தைலக்காப்பு சாற்றுவதற்கு ஆன்மீக மற்றும் விஞ்ஞான காரணங்கள் பல சொல்லப்படுகிறது. 

Previous Post Next Post