-->

கசகசாவில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா


கசகசா

கசகசா என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஓர் பொருள் என்றே பெரும்பாலான மக்கள் நினைகின்றனர். ஆனால் சமையலை தாண்டி கசகசா எண்ணற்ற நன்மைகளை அளிக்கக்கூடியது. கசகசா விதைகளினால் ஏற்படக்கூடிய நன்மைகள், பயன்கள் பற்றி பின்வரும் பதிப்பில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கசகசா ஆரோக்கிய நன்மைகள்


கசகசா ‘Poppy Seeds’ என ஆங்கிலத்தில் அழைக்கபடுகிறது. கசகசா மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது. இந்த கசகசா விதைகள், கசகசா எனும் மலர் தாவரத்திலிருந்து பெறப்படும் எண்ணெய் விதைகள் ஆகும்.

கசகசா விதைகளின் அறிவியல் பெயர் பாப்பாவர் சோம்னிஃபெரம். இது பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மத்திய ஐரோப்பாவில் இவை அதிகமாக பயிராகின்றன. பல வகை உணவு பொருட்கள் தயாரிக்க கசகசா விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கசகசா விதை எண்ணெய் எடுக்கவும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

கசகசா வகைகள்

கசகசாவில் பல வகைகள் உள்ளன, கசகசாவில் உள்ள சில பிரபலமான வகைகள் பின்வருமாறு,

நீல கசகசா இதை ஐரோப்பியன் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; பெரும்பாலும் இது மேற்கத்திய பிரட்கள் மற்றும் மிட்டாய்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.
வெள்ளை கசகசா இதை இந்தியன் அல்லது ஆசியன் கசகசா விதைகள் என்றும் அழைப்பர், இது எல்லா வித உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஓரியண்டல் கசகசா  இதை ஓபியம் கசகசா விதைகள் என்றும் அழைப்பர், இது அபின் விளைச்சல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகிறது.

கசகசாவின் ஆரோக்கிய பயன்கள்

கசகசா விதைகள் நன்மைகள் பலவற்றை தருகின்றன. கசகசா விதைகளினால் ஏற்படும் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்,

செரிமானத்திற்கு உதவுகிறது 

கசகசா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால், அது செரிமானத்திற்கு உதவும். இந்நார்ச்சத்தானது மலத்தை இளக்கி மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

தூக்கமின்மையை குணப்படுத்தும்

சிலர் நிம்மதியான தூக்கமில்லாமல் தவிப்பர். அத்தகையவர்கள் கசகசா விதைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். கசகசா விதைகள் உடலில் உள்ள கார்டிசோல்களை குறைக்க உதவுகிறது; இந்த மனதை அமைதியாக்கி நிம்மதியான தூக்கத்திற்கு உதவும். மேலும் கசகசா விதைகளை கொண்டு தேநீர் தயாரித்து உறங்க செல்லும் முன் உட்கொள்வது நல்ல உறக்கத்தை பெற உதவும்.

பாலியல் ஆரோக்கியம் மேம்படும்

கசகசா விதைகள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் இவ்விதைகளில் உள்ள உறுப்புகள் ஆண்மையை அதிகரிக்கின்றன. மேலும் பாலியல் ஆசையை தூண்ட உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கசகசா விதைகளில் உள்ள ஜிங்க் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. கசகசாவில் இருக்கும் இரும்புச்சத்து இந்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் உதவுகிறது.

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்

கசகசா விதைகளில் அதிக அளவு காப்பர் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்த உதவுகிறது. கசகசா விதைகளில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் எலும்பு திசுவை உருவாக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள மாங்கனீசு சத்து கொலஜன் உற்பத்திக்கு உதவி, சேதம் எதுவும் ஏற்படாமல் தடுத்து எலும்புகளை பாதுகாக்க உதவுகிறது.


மூளை ஆரோக்கியம் மேம்படும்

மூளைக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், இரும்பு, காப்பர் போன்ற சத்துக்கள் கசகசா விதைகளில் அதிகளவு நிரம்பியுள்ளன. இந்த தாதுச்சத்துக்கள் அனைத்தும் நரம்பு செல்களை தூண்டி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும்

கசகசா விதைகள் பெண்களின் உடலில் உள்ள பெலோப்பியன் குழாய்களில் நல்ல ஓட்டத்தை ஏற்படுத்தி, கருவுறுதலை அதிகரிக்க உதவுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. பெலோப்பியன் குழாய்களில்  இருக்கும் கோழை அல்லது சளி ஆகியவற்றை கரையச்செய்து, கருவுறுதலை அதிகரிக்க கசகசா எண்ணெய் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.


இதய ஆரோக்கியம் மேம்படும்

கசகசா விதைகளில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கசகசா விதைகளில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த கொழுப்பு அமில சத்துக்கள் இதயத்திற்கு பெரும் நன்மை புரியும்.


வாய் புண்கள் குணமடையும்

கசகசா விதைகள் உடலுக்கு குளிர்ச்சி அளித்து வாய் புண்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வாய் புண்களை விரைவில் ஆற்றுகின்றன. உலர்ந்த தேங்காய், பொடித்த சர்க்கரை மிட்டாய், நில கசகசா விதைகள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். வாய் புண்களிலிருந்து உடனடி நிவாரணம் பெற, இக்கலவையை ஒரு சிறு சிறு துண்டுகளாக செய்து, மிட்டாய் போல மென்று சுவைத்து சாப்பிடுவதன் மூலம் வாய் புண்கள் விரைவில் குணமடையும்.

ஆற்றலை அதிகரிக்கிறது

உடலுக்கு ஆற்றல் அளிக்கும் சிறு ஊட்டச்சத்துக்களான சிக்கலான கார்போஹைட்ரேட்கள் கசகசா விதைகளில் அடங்கியுள்ளது. இந்த விதைகள் கால்சியம் சத்தை உறிஞ்சி உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

கசகசா ஆரோக்கிய குறிப்புகள்


சிறுநீரக கற்கள் கரையும்

கசகசா விதைகளில் இருக்கும் பொட்டாசிய சத்து சிறுநீரக கற்களுக்கு எதிராக போராடி சிறுநீரக கற்களை குணப்படுத்தக்கூடியது. ஆனால் குறைவான அளவே எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் ஆக்ஸாலிக் என்னும் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது.

சுவாச ஆரோக்கியம் மேம்படும்

சுவாசம் சார்ந்த பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படாமல் தடுத்து, சுவாச ஆரோக்கியத்தை பாதுகாக்க கசகசா விதைகள் பெரிதும் உதவுகின்றன.

கண் பார்வை தெளிவடையும்

கசகசா விதைகளில் அதிக அளவு ஜிங்க்சத்து உள்ளதால், அது கண் நோய்களான மஸ்குலார் குறைபாடு போன்றவற்றை தடுத்து கண்ணின் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது. கசகசா விதைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் கண்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன. இதனால் கண் பார்வை தெளிவடையும்.
Previous Post Next Post