-->

ஜவ்வரிசி மருத்துவ பயன்கள்


ஜவ்வரிசி

மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி ஆகும். ஜவ்வரிசி ஒரு பதப்படுத்தப்பட்ட சைவ உணவாகும். அதனால் தான் இதனை அனைத்து விரதத்தின் போதும் இனிப்புகளில் பயன்படுத்துகின்றனர். எல்லா வகையான சுபகாரியங்களும் ஜவ்வரிசி இல்லாத பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது.

ஜவ்வரிசி பயன்கள்


ஜவ்வரிசி சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்றும் அழைக்கபடுகிறது. ஜவ்வரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. பல இந்தியர்கள் பாலுக்கு அடுத்ததாக குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் வகை உணவாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்.

ஜவ்வரிசியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்

100 கிராம் ஜவ்வரிசியில் 351 கி.கலோரிகள், 87 கி.கார்போஹைட்ரேட், 0.2 கி. கொழுப்பு மற்றும் 0.2 கி. புரதம் உள்ளது, மேலும் கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே இதில் உள்ளது.

ஜவ்வரிசியின் மருத்துவ நன்மைகள்

ஊட்டச்சத்து மிக்க உணவு

ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும். குறிப்பாக விளையாட்டு  வீரர்கள் ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அவர்களின் உடலில் இழந்த சத்துக்கள் விரைவில் ஈடு செய்யப்பட்டு, தசைகளுக்கு நல்ல வலிமையைத் தருகிறது. மேலும் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.

ரத்த சோகை குணமாக

ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி குறையும் போது அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. இரத்தசோகை நோய் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாமல் தடுக்க முடியும்.

உடனடி ஆற்றலை கொடுக்கிறது

உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கியம் உண்டாக இதனை உணவாக அளிக்கலாம். ஏனெனில் இது உடனடி ஆற்றலையும், செரிமான சக்தியையும் அளிக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சி அடைய வைப்பதிலும், இது முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு, ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.

வயிற்று புண்கள் குணமாகும்

காலை உணவு சாப்பிடுவதை தவிர்ப்பவர்கள், அதிக சிகரெட் புகைப்பவர்கள் போன்றவர்களுக்கு அல்சர் பாதிப்பு விரைவாக ஏற்படுகிறது. உடலில் உள்ள ஜீரண உறுப்புகளான உணவுக் குழாய், வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்கள் அல்சர் எனப்படுகிறது. இத்தகைய அல்சர் புண்களை ஆற்றுவதில் ஜவ்வரிசி மிக சிறப்பாக செயல்படுகிறது.

ஜவ்வரிசி குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அல்சர் புண்களை விரைவாக ஆற்றி உணவுக்குழாயில் செரிமானம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் சுலபமாக கடந்து செல்ல குடலின் சுவற்றில் வழவழப்புத் தன்மையை உண்டாக்குகிறது. இதனால் அல்சர் குணமாகிறது.

உடல் எடையை அதிகரிக்கும்

ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வு ஜவ்வரிசி தான்.

ஜவ்வரிசி உடல்நல பயன்கள்


பசியை தூண்டும்

ஒரு சிலருக்கு நேரத்துக்கு பசிக்காது, அப்படிப்பட்டவர்கள் ஜவ்வரிசியை சிறிது சாப்பிட்டால் போதும். இது பசியை தூண்டும்.

எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக்கும்

உடலின் எலும்புகளை ஆரோக்கியமாக்கும், மூட்டுவலியைக் குறைக்கும். மேலும் பதட்டத்தைக் குறைக்கும். உடற்பயிற்சிக்கு முன், பின் என எப்போதும் இதை சாப்பிடலாம். ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

ஸ்டார்ச்சால் நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் எதுவும் இல்லாததால், இது எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
Previous Post Next Post