-->

கொய்யா பழத்தை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் பயன்கள்

 கொய்யா பழத்தின் நன்மைகள்

வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் கொய்யா பழம்பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை நிற கொய்யா பழம் மற்றொன்று சிவப்பு நிற கொய்யா பழம்.

இரண்டு கொய்யா பழத்திலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

 

கொய்யா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள்  நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். கண் பார்வை கோளாறுகளை சரி செய்கிறது.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. .

கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது. 

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால் மூளை புத்துணர்ச்சி அடைந்து மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.


வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது. இரத்தத்தில் இருக்கும் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி ரத்தத்தை சுத்தப் படுத்துகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

சருமத்துக்கு மிகவும் சிறந்த பழமாக கொய்யா விளங்குகிறது. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக்  குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

கொய்யா பழத்தின் மருத்துவ பயன்கள்

  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா பழம் பயன்படுகிறது.
  • தைராய்டினால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய கொய்யா பழம் பயன்படுகிறது. 

  • உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பினை கரைத்து கொழுப்பினால் ஏற்படும் உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.
  • கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் அதன் வீரியம் குறைந்து நோய் தாக்கமும் குறையும்.
  • கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு தீர்ந்து விடும்.
  • கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் கொய்யா பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். கொய்யா பழத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போலிக் ஆசிட்நிறைந்திருப்பதால் தாய்க்கும் வளரும் குழந்தைக்கும் அதிக நன்மையை தரும்.
  • அஜீரண கோளாறினால் பாதிப்படைந்தவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர எளிதில் ஜீரண சக்தி ஏற்பட்டு வயிற்று உப்பசம் போன்றவை ஏற்படாமல் சரி செய்யும்.

Previous Post Next Post