தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா?

தலைமுடி கரு கருவென்று வளர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். நீண்ட, அழகான, கருமையான, அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்று நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது. குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருப்பது தனி அழகாகும். சராசரியாக ஒருவரது தலையில் 100000 முதல் 150000 வரை தலைமுடி இருக்கும். தினமும் சராசரியாக 100 முடி நம் தலையில் இருந்து உதிரும். அதனை ஈடு செய்ய அதே அளவு முடி வளர்ந்து விடும்.
தலைக்கு ஊற்றும் தண்ணீர்

நாம் தலைக்கு குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி குளிப்பதினாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அதிக அளவில் மருந்து சேர்க்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதாலும், அதிக உப்பு கலந்த நீரினை பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும்.

ஊட்டச்சத்து குறைபாடு

உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி (B), வைட்டமின் இ (E) மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை அடிக்கடி எடுத்துகொள்ள வேண்டும்.

தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பது

தலை முடியில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதின் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும். தினமும் தலைக்கு குளித்து தலையில் அழுக்கு தூசு போன்றவை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள். தலையில் இருக்கும் பொடுகை அகற்றுவதின் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம். பொடுகை நீக்கும் மருந்தை பயன்படுத்தி தலையை பொடுகு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

தூக்கமின்மை

தூக்கம் மனித உடலுக்கு மிகவும் அவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்வு ஏற்படும். நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம்.


தலைமுடி உதிர்வதை தடுக்க சில கைவைத்தியங்கள்

1. கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி கொட்டுவதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெற முடியும். கறிவேப்பிலையில் நிறைந்துள்ள இரும்புசத்து தலைமுடிக்கு அதிக அளவு போஷக்கினை கொடுத்து  முடி உதிர்வை தடுக்கிறது.

2. வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிறை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊற வைத்து குளிப்பதால் கேசத்துக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது குறையும்.

3. தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை அலசுவதின் மூலம்  முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம்.

4. வெதுவெதுப்பான எண்ணையை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.

5. வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தலைமுடியை அலசுவதின் மூலம் தலை முடி உதிர்வை தடுக்கலாம்.

6. தேங்காய் எண்ணெய், விளகெண்ணை,  நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.

7. சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.  

8. செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை குளித்து வந்தால் தலை முடி கொட்டுவது நின்று நன்கு பளப்பாக மாறும்.

9. வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.

10. பாதாம் எண்ணையை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.

11. இரவு தூங்க செல்வதற்கு முன் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை லேசாக தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி கொட்டுவது நின்று தலை முடி வலுவாகும்.

12. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தேய்த்துக் குளிக்கலாம்.

13. கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்லை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின் குளித்து வர வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி உறுதியாகும். தலை முடிக்கு குளிர்ச்சி உண்டாகும். தலையில் உண்டாகும் அதிகப்படியான வெப்பத்தை கட்டுப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கும்.

14. படுக்கும் முன் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் போல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று வாரம் தொடர்ந்து செய்தால் கூந்தல் உதிர்வது நின்றுவிடும். மேலும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை சூடு செய்து தடவி, எண்ணெய் குளியல் எடுக்கலாம்.