லக்ஷ்மி குபேர பூஜை சிறப்புகள்
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி
அமாவாசை அன்று மாலை நேரத்தில் குபேரரையும், மகாலக்ஷ்மியையும் வணங்கி வழிபடுவதே லக்ஷ்மி குபேர
பூஜையாகும். இந்த ஆண்டு நாளை நவம்பர் 14 (ஐப்பசி – 29
) தேதி சனிக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இந்த தீபாவளி
அன்று மாலை நேரத்தில் 5 மணி முதல் 8
மணிக்குள் செய்யப்படுவதே லக்ஷ்மி குபேர பூஜையாகும். இதுவே லக்ஷ்மி குபேர பூஜை
செய்ய சிறந்த நேரமாகும்.
நாமும் இந்நாளில் செல்வத்தை வழங்கிய மகாலக்ஷ்மியையும், விரதமிருந்து வழிபட்ட குபேரனையும் விரதமிருந்து வணங்கி நாம் வழிபட்டால் நம் வாழ்வில் செல்வ செழிப்பு ஏற்பட்டு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெரும் என்பது நம்பிக்கை.
லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை
லக்ஷ்மி குபேர பூஜை மிகவும் எளிய முறையில் நாம்
செய்து குபேரரின் அருளை பெறலாம். லக்ஷ்மி குபேர பூஜை செய்வதற்கு சிறந்த நேரம் மாலை
நேரமாகும். மாலை நேரத்தில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை
லக்ஷ்மி குபேர பூஜை செய்து வழிபடலாம்.
லக்ஷ்மி குபேர பூஜை செய்வதற்கு முதலில் பூஜை செய்ய போகும் இடத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின் ஒரு மனப்பலகையை வைத்துக் கொள்ள வேண்டும்.
பூஜையை ஒரு மனப்பலகையின் மீது தான் செய்ய
வேண்டும். வெறும் தரையில் செய்வது சிறந்தது அல்ல.
மனப்பலகை முழுவதும் மஞ்சள் பூசி பின் அரிசி
மாவினால் கோலமிட வேண்டும்.
பின்னர் மகாலக்ஷ்மி தாயாரின் படம் அல்லது சிலை
இருந்தால் அதை வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் குபேரர் தனது சம்பத்துகளுடன் இருக்கும் படம்
அல்லது சிலையை வைத்துக் கொள்ள வேண்டும்.
மகாலக்ஷ்மியிடம் குபேரர் விரதமிருந்து வழிபட
காரணமாக இருந்த சிவபெருமானையும் நாம் பூஜையில் வைக்க வேண்டும்.
நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன் வழிபட
வேண்டிய மிக முக்கியமான கடவுள் விநாயகர். எனவே மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து
அவருக்கு திலகமிட்டு விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லை வைக்க
வேண்டும்.
பின்னர் அனைத்து தெய்வங்களுக்கும் பூ போட
வேண்டும்.
பின் குபேர படத்திற்கு முன்னால் குபேர கோலம் என
சொல்லகூடிய கட்டத்தை போட வேண்டும்.
குபேர கட்டத்தை போடும்போது கட்டத்தை குங்குமத்தால் போட வேண்டும், எங்களை அரிசிமாவினால் எழுத வேண்டும், கட்டத்தை சுற்றி நான்கு பக்கமும் ஸ்ரீ எனும் மகாலக்ஷ்மி நாமத்தை போட வேண்டும்.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு நாணயம் வைக்கும்
அளவிற்கு சிறது இடம் விட்டு போட வேண்டும்.
பின் கட்டத்தில் ஒரே மாதிரியான 9 நாணயங்கள் ஒவ்வொரு
கட்டத்திலும் வைக்க வேண்டும். அதற்க்கு மஞ்சள், குங்குமம்,
பூ ஆகியவற்றை வைக்க வேண்டும்.
குபேர கட்டத்தை மறைக்காதவாறு ஒரு வாழை இலையை
வைக்க வேண்டும்.
அதன் நடுவில் கொஞ்சம் பச்சரிசி, நவதானியம் இரண்டையும்
பரப்பி வைக்க வேண்டும்.
அதில் ஒரு பித்தளை செம்பினை வைக்க வேண்டும்.
செம்பின் உள்ளே நீரினை நிரப்பி அதில் ஒரு ஒரு
ரூபாய் நாணயத்தை போடா வேண்டும்.
அதில் சந்தனம், பன்னீர், போன்ற
வாசனை பொருட்களை சேர்க்க வேண்டும்.
அந்த செம்பின் மீது ஒரு மட்டை தேங்காயை வைக்க
வேண்டும். தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை வைக்க வேண்டும்.
முக்கியமாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைக்க
வேண்டும்.
பிறகு நெய்வேத்தியமாக மகாலட்சுமிக்கு மிகவும்
பிடித்த பால் பாயாசம், அல்லது வேறு ஏதேனும் ஒரு இனிப்பை வைக்கலாம்.
தங்கள் வீட்டில் இருக்கும் பணம், நகை போன்றவற்றை
வழிபாட்டில் வைக்க வேண்டும்.
நாணயங்கள் இருந்தால் அதையும் ஒரு தட்டில்
வைத்துக் கொள்ளலாம்.
உங்களிடம் குபேர விளக்கு இருந்தால் குபேர
விளக்கினை இரு புறமும் ஏற்றி வைக்க வேண்டும். இல்லையென்றால் குத்து விளைக்கினை
ஏற்றி வைக்கலாம்.
பூஜைக்கு அர்ச்சனை செய்வதற்காக கொஞ்சம் உதிரி
பூக்களும், குங்குமமும்
வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது வழிபாட்டினை துவங்கலாம். விளக்கேற்றிய
பின் முதலில் விநாயகரை வழிபட வேண்டும். பின் மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும்.
மகாலக்ஷ்மி ஸ்தோத்ரம் தெரிந்தால் அதை சொல்லி வழிபடலாம்.
பின்னர் சிவபெருமானை வழிபட வேண்டும்.
பின் குபேரரை வழிபட வேண்டும்.
வழிபாட்டில் வைத்துள்ள நாணயங்களை ஒவ்வொன்றாக
எடுத்து லக்ஷ்மி குபேரரின் பாதத்தில் வைத்து எடுத்து நாணயத்தின் ஒலி கேட்கும்
வண்ணம் ஒரு தட்டிலோ அல்லது கின்னத்திலோ போட வேண்டும்.
பின் தீப தூப ஆராதனை காட்டி லக்ஷ்மி குபேரரை
வணங்கி அனைத்து செல்வ வளங்களையும் தருமாறு வேண்டி வழிபட வேண்டும்.
மகாலக்ஷ்மி ஸ்தோத்திரம் தெரியாதவர்கள் “குபேராய நமஹ”
“தனபதியே நமஹ” என்று கூறி வழிபடலாம்.
பின் நெய்வேத்தியமாக வைத்தவற்றை அனைவருக்கும்
கொடுத்து வாழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
பூஜையில் வைத்து வழிபட்ட நாணயங்களை ஒரு மஞ்சள்
துணியில் வைத்து நீங்கள் பணம் சேமித்து வைக்கும் பெட்டகத்தில் வைத்து கொள்ளலாம்.
இவ்வாறு வழிபடுவதால் மகாலக்ஷ்மியின் அருள் முழுமையக கிடைத்து வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடக்கப்பெரும்.