-->

மட்டன் குடல் குழம்பு செய்வது எப்படி

ஆட்டுக் கறி குடல் குழம்பு செய்வது எப்படி 

வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, புரதம், இரும்புச்சத்து, கிரோமியம், ஃபோலிக் அமிலம் போன்ற உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதிகமான அளவில் கிடைகின்றன. ஆட்டுக் குடல் உங்களது சீரான உடல் இயக்கத்தையும் இது ஊக்குவிக்கிறது.


தேவையான பொருட்கள்

ஆட்டு கறி குடல் - 500 கிராம்

வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )

தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)

தேங்காய் துருவல்  – 1 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

பட்டை – 1 துண்டு

கிராம்பு – 2

சோம்பு – 1 ஸ்பூன்

கசகசா – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா – ½ ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி ( பொடியாக நறுக்கியது )

செய்முறை

முதலில் ஆட்டு குடலை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.

ஆட்டுக் குடலை சுத்தம் செய்யும் போது சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு கல் உப்பு சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். 

குக்கரில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வரும் வரை வதக்கவும்.

வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வர நன்கு வதக்கி கொள்ளவும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்க்கவும்.

மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

இப்போது சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துள்ள ஆட்டு குடலை இத்துடன் சேர்க்கவும்.

ஆட்டுக் குடலை சேர்த்து நன்கு வதக்கவும்

ஆட்டுக் குடலுடன் மசாலா நன்கு சேரும் வரை வதக்கி விடவும்.

ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் தேங்காய் துருவல், 1 ஸ்பூன் கசகசா, 1 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த தேங்காய் மசாலாவை குக்கரில் சேர்த்து கொள்ளவும்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.

விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கைப்படி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து பின் பரிமாறினால் சுவையான ஆட்டுக் குடல் குழம்பு தயார்.

இந்த ஆட்டுக் குடல் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.


Previous Post Next Post