-->

மலபார் மீன் குழம்பு - Malabar Fish Kuzhambu

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:
  1.  மீன் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 200 கிராம்
  3. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  4. தக்காளி - 200 கிராம்
  5. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  6. தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு
  9. தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள் :
  1. தேங்காய் - ஒரு மூடி
  2. சீரகம் - ஒரு டீஸ்பூன்
  3. பச்சை மிளகாய் – 2
தாளிக்க:
சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
1.மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

2.அத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

3. பின்னர் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த் தூள், அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

4.குழம்பு நன்கு கொதி வந்ததும் மீனை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.

5.மீன் வெந்த பிறகு குழம்பை இறக்கி பரிமாறினால் சுவையான மலபார் மீன் குழம்பு ரெடி.

மேலும் பல வகையான மீன் உணவுகள் இங்கே click செய்வதன் மூலம் காணலாம்.

Previous Post Next Post