தேவையான பொருட்கள்:
- நெத்திலி மீன் - 1/2 கிலோ
 - எலுமிச்சம்பழம் (சாறு) - 2 கரண்டி
 - அரிசி மாவு - 2 கைப்பிடி
 - மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
 - தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
 - இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
 - எண்ணெய் - தேவையான அளவு
 - உப்பு – தேவையான அளவு
 - மைதா மாவு - 1 கைப்பிடி
 - சோளமாவு - 1 கைப்பிடி
 - கறிவேப்பிலை - 2 கொத்து
 
செய்முறை:
1.முதலில் நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். 
2.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,மைதா மாவு,சோள மாவு,மிளகாய் தூள்,தனிய
தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. பின் எலுமிச்சை பழ சாரு,தேவையான அளவு உப்பு,சிறிதளவு கறிவேப்பிலை
சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
4. நெத்திலியுடன் இந்த மாவு, மசாலாவை கலந்து சிறிது நீர் சேர்த்துப் கிளறவும்.
5. எண்ணைய் காய்ந்தும் நெத்திலி மீனை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொறித்து
எடுத்தால் சுவையான நெத்திலி கிரிஸ்பி வறுவல் ரெடி.
