-->

ஆட்டுக்கால் பாயா - Attukaal Paya

ஆட்டுகால் பாயா  செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்  :

ஆட்டுக்கால் - 8
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2 (பெரியதாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை , கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 8

செய்முறை :

1. முதலில் தக்காளி, வெங்காயம்,மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3. ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

4. சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

5. ஊற வைத்த ஆட்டுக்காலை குக்கரில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து ஆட்டுக்கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

6. கலவை நன்கு கொதி வந்த பின்பு குக்கரை மூடி  மூன்று விசில் விட்டு பின் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

7. ஆட்டு கால் வெந்தவுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.

8. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்

9. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி பாயாவில் சேர்த்து சிறிது கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் சுவையான சத்தான ஆட்டுக்கால் பாயா ரெடி.


Previous Post Next Post