-->

பிக் பாஸ் 2 வில் பங்கேற்கபோகும் பிரபலங்கள் இவர்கள்தான்

பிக் பாஸ் 2


பிக்பாஸ்

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி அரம்பத்தில் மக்களிடையே சில எதிர்ப்புகளை சந்தித்தாது. ஆனால் போக போக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார்.

பிக்பாஸ் 2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2ம் பாகம் வருகிற ஜூன் மாதம் 17 ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த இரண்டாம் பாகத்தையும் தொகுத்து வழங்க உள்ளார்.

டீசர்

இதற்கான டீஸர் கடந்த சனிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீசனில் கலந்துகொள்ள பல பிரபலங்களுக்கு பிக்பாஸ் குழு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் சீசனில் கலந்துகொண்ட பிரபலங்களைவிட இந்த சீசனில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அழைத்து நிகழ்ச்சியை மிக பிரமாண்ட நடத்த வேண்டும் என வேலைகள் முழு வீச்சில் நடந்துவருகிறது. 

யார், யார்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார், யார் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,

ராய்லஷ்மி, ஜனனி ஐயர், சொர்ணமால்யா, கீர்த்தி சாந்தனு, லட்சுமி மேனன், இனியா, ரக்‌ஷிதா, பூனம் பாஜ்வா, ஆலியா மானசா, பரத், ஷாம், ஜித்தன் ரமேஷ், ப்ரேம்ஜி, பவர் ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி, பாலசரவணன், அசோக், படவா கோபி, செல்வன் உள்ளிட்டோருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இந்த பட்டியலில் இருப்பவர்கள் பாதி பேர் வெளியேறவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Previous Post Next Post