-->

முடி உதிர்வதை தவிர்த்து அடர்த்தியான அழகான கூந்தலை பெற வேண்டுமா ?




நாம் தினசரி உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களே ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.ஒருவருக்கு தலைமுடி உதிர ஆரம்பித்தாலோ,அல்லது தலைமுடி மெதுவாக வளர்ச்சி அடைந்தாலோ, முதலில் கவனிக்க வேண்டியது உங்களது உணவு பழக்கவழக்கங்களைதான். உடலிலேயே தலைமுடி தான் வேகமாக வளர்ச்சி பெறும் திசுக்களாகும். எனவே உணவுகளின் மூலம் தலைமுடியின் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சிக்கு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி5, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12, இரும்புச்சத்து, ஜிங்க், புரோட்டீன், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், சிலிகா, சல்பர் மற்றும் ஜெர்மானியம் போன்ற சத்துக்கள் அவசியமானவை ஆகும்.

எந்தந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான தலைமுடியை பெற முடியும் என்பதை இந்த உணவுப் பட்டியலின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.


முட்டைகள்
தலைமுடி உதிராமலும்,மென்மையான கூந்தலை பெறவும் புரோட்டீன் மிகவும் அவசியமானது.. முட்டையில் தலைமுடியின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் உள்ளது. அதோடு முட்டையில் பயோடின், இதர பி வைட்டமின்கள் போன்ற தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும் சத்துக்களும் உள்ளன. ஆகவே தலைமுடி அதிகம் கொட்டுவது போன்று இருந்தால், தினமும் முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.அதுவும் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.

மாட்டிறைச்சி
நல்ல தரமான முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் அவசியமானது. மாட்டிறைச்சியில் நல்ல அளவிலான புரோட்டீனுடன் பி வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவையும் உள்ளது. தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சியை வாரத்திற்கு 2 முறை உட்கொண்டு வந்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும். ஒருவேளை உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், மாட்டிறைச்சியைத் தவிர்த்து, இதர புரோட்டீன் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

பீன்ஸ்
பீன்ஸ்களில் புரோட்டீன், நார்ச்சத்து, பி வைட்டமின்கள், வைட்டமின் சி, ஜிங்க் மற்றும் கனிமச்சத்து போன்ற தலைமுடி வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. மேலும் பீன்ஸில் நல்ல அளவில் இரும்புச்சத்து உள்ளது. எனவே பீன்ஸ் வகைகளைச் சேர்ந்த காராமணி, கருப்பு காராமணி, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள்

சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஊட்டச்சத்துக்களான புரோட்டீன், ஜிங்க், செலினியம், பயோடின், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, பி வைட்டமின்கள், வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை உள்ளது. மேலும் சூரியகாந்தி விதைகளில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த சூரியகாந்தி விதைகளை ஒரு கையளவு தினமும் சாப்பிட்டு வந்தால், அது தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வேண்டுமானால் சூரியகாந்தி விதைகளை உண்ணும் உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். அதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். ஏனெனில் இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு அதிகம்.

நட்ஸ்
நட்ஸ்களில் புரோட்டீன், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் போன்ற தலைமுடி உதிரும் பிரச்சனைக்குத் தேவையான அனைத்தும் நிரம்பியுள்ளன. ஒருவர் தினமும் நட்ஸ்களை சிறிது சாப்பிட்டு வந்தால், அது பல வருடங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே நட்ஸ்களான பாதாம், வேர்க்கடலை, வால்நட்ஸ் மற்றும் முந்திரி போன்றவற்றை தினமும் சிறிது சாப்பிடுங்கள். அதிலும் இரவில் நீரில் ஊற வைத்து நட்ஸ்களை சாப்பிட்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

பசலைக் கீரை
கீரைகளிலேயே பசலைக்கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் பி, சி, , பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆகவே தலைமுடி அதிகம் உதிர ஆரம்பித்தால், பசலைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுங்கள் அல்லது பசலைக்கீரை ஜூஸ் எடுத்து கொள்ளுங்கள்.

ஓட்ஸ்
என்ன நம்ப முடியவில்லையா?  ஓட்ஸில் பி வைட்டமின்கள், ஜிங்க், புரோட்டீன், காப்பர் போன்றவை அதிகம் உள்ளது. இவை தலைமுடியின் வளர்ச்சி அவசியமான சத்துக்களாகும். இதோடு பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவைகளும் உள்ளன. எனவே முடிந்தால் ஒரு பௌல் ஓட்ஸை தினமும் சாப்பிடுங்கள்.

கேரட்
கேரட்டுகளில் நல்ல அளவிலான பீட்டா-கரோட்டீன் என்னும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் ஏ, ஸ்கால்ப்பில் ஆரோக்கியமான அளவில் எண்ணெய் சுரப்பதற்கு உதவும். அதற்கு கேரட்டை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். கேரட்டை ஜூஸ் வடிவில் எடுப்பதாக இருந்தால், அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் தினமும் காலைய

Previous Post Next Post