-->

பூசணி விதைகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?

ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் விதைகளும் முக்கிய பங்கை வகிக்கிறது.விதைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது.

பூசணி விதைகளை சாப்பிடுங்கள்

இந்த விதைகளில் நாம் நினைத்திராத அளவில் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.பூசணி விதைகளில் மக்னீசியம், மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் மற்றும் ஜிங்க் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் நிறைந்துள்ளது.

இந்த பூசணி விதைகளை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க
பூசணி விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.இருதய நோய் வராமல் தடுக்கும்.எனவே தினமும் தவறாமல் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் மேற்கொள்ளுங்கள்.

சர்க்கரை நோயை கட்டுபடுத்த
பூசணி விதைகள் க்ளுக்கோஸ் அளவைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரித்து, சர்க்கரை நோயின் அதிரிப்பதை குறைக்கும். ஆகவே உங்களுக்கு சர்க்கரை நோயை கட்டுபடுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.

உடல் எடை குறைவதற்கு
பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை சரியான அளவில் உள்ளது. இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும். எனவே எடையைக் குறைக்க பூசணி விதைகளை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வாருங்கள்.

ஆஸ்டியோபோரோசிஸ்
முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைபாட்டினால் எலும்புகள் தேய்ந்து எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஏற்படுவது தான் ஆஸ்டியோபோரோசிஸ். பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரித்து எலும்பு .தெயமானதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள்
பூசணி விதைகள் ஒருவரது மனநிலையை சரி செய்து, மன அழுத்தினால் ஏற்படும் மன இறுக்கத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள் தான் கரணம்.இந்த பைட்டோ-கெமிக்கல், ட்ரிப்டோஃபேனை செரடோனினான மாற்றி, மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மனநல பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

மாதவிடாய் இறுதி கால அறிகுறிகள்
பூசணி விதைகள் இறுதி மாதவிடாய் கால அறிகுறிகளான உடல் சூடு, தலைவலி, இரவு நேர வியர்வை மற்றும் ஏற்ற இறக்க மனநிலை போன்றவற்றைக் குறைக்கும். எனவே பெண்கள் தினந்தோறும் ஒரு பிடி அளவு பூசணிக்காய் விதைகளை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை முற்றிலும் தவிர்க்கலாம்.


.
Previous Post Next Post