-->

துளசி சாறு மன அழுத்தத்தை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

துளசியின் நன்மைகள்

துளசி பல்வேறு மருத்தவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் ஒரு ஒப்பற்ற மூலிகையாக திகழ்கிறது. துளசியை சாப்பிட்டால் மட்டுமல்ல, சுவாசித்தால் கூட உடலுக்கு நன்மை தான் என்று உங்களுக்கு தெரியுமா? துளசி சாற்றை வெறுமனே குடிக்காமல் அதில் சிறிது தேன் கலந்து குடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்களே பாருங்கள். 
1. சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த தேன் கலந்த துளசிக் சாற்றை கொடுத்தால் சளி, இருமல் நீங்கும்.
2. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
3. 1 டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலை விரைவாக குறைக்கிறது.

தேன் மற்றும் துளசி

4. துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயத்தின் நலனை ஊக்குவித்து, இதயத்தில் ஆக்ஸிஜன் நன்றாக சென்று வருவதற்கு உதவுகிறது.
5. சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைத்து, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
6. துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
7. துளசி யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதையும், அதை கரைக்கவும் உதவுகிறது.
8. சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை விரைவில் சரியாகும்.
துளசியின் மருத்துவ நன்மைகள்

9. துளசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது.
10. நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

இதனால் தான் துளசி மாடம் , துளசி நீர் புனிதமாக கருதப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் சொன்ன அனைத்திற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது.
Previous Post Next Post