-->

விஜய்க்கு வில்லியானர் நடிகை வரலட்சுமி சரத்குமார்

வரலஷ்மி சரத்குமார்

விஜய் 62
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் படம் விஜய் 62. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையில், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இத படம் உருவாகி வருகிறது.

வில்லி
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறாராம். வரலட்சுமிக்கு படம் முழுக்க வரும் கனமான கதாபாத்திரமாம். இந்தபடத்தில் அவர் ஒரு அரசியல்வாதியாக விஜய்யை எதிர்க்கும் வில்லி கதபாத்திரத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


நெகடிவ் ரோல்
இந்த படத்திற்காக நெகடிவ் ரோலில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் வரலட்சுமி சரத்குமார் அவ்வாறு அடம்பிடிப்பது இல்லையாம். அவரின் இந்த குணம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.


ஆசை
இது குறித்து பேசிய வரலட்சுமி இளையதளபதி விஜய்யின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் வில்லியாக நடித்தால் என் இமேஜ் என்னாவது என்று நான் கவலைப்படுவது இல்லை. கிடைக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

சண்டக்கோழி 2
விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்திலும் வரலட்சுமி வில்லியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலட்சுமியை போன்றே விஜய்யின் ரசிகர்களும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகிறது.
Previous Post Next Post