தேவையான பொருள்கள் 

அகத்திக் கீரை – ஒரு கட்டு
தக்காளி – 3
வெங்காயம் – 2
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
மைதா மாவு – 3 ஸ்பூன்
வெண்ணெய் – 50 கிராம் 

செய்முறை 

1. 
முதலில் கீரையைச் சுத்தம் செய்துஆய்ந்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு வேகவைத்து இறக்கி சாற்றை வடிகட்டிக்கொள்ளவும்.

2. பிறகுவாணலியில் வெண்ணெய்யைப் சேர்த்து உருக்கிஅதில் நறுக்கிய வெங்காயம்தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கிமிளகுத்தூள் கலந்து வடிகட்டிய வைத்துள்ள கீரைச் சாற்றுடன் சேர்க்கவும்.

3. அடுத்துவாய் அகலமான பாத்திரத்தில் சிறிது வெண்ணெய்விட்டு உருக்கிமைதா மாவைத் தூவி கிளறிசிவந்ததும்ஏற்கெனவே தயாரித்துள்ள சாற்றையும் சேர்த்துஉப்புப்போட்டுஐந்து நிமிடம் கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 

4. பித்த  மயக்கம் ,பார்வை குறைபாடு,சிறுநீரக பிரச்சனை,போன்ற பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக இந்த சூப் பயன்படுகிறது.