-->

உடல் எடையை குறைத்து ஒல்லியான உடலை பெற வேண்டுமா ? அப்போ இந்த தண்ணீரை குடிங்க..


சோம்பு 

உடல் எடையை குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி, உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும் என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை.

அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் மிக முக்கியமான ஒரு மருத்துவ பொருளாக பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

உணவு சாப்பிட்ட முடித்தவுடன் தினமும் கொஞ்சம் சோம்பை எடுத்த வாயில போட்டு மென்னு, சாற கொஞ்சம் கொஞ்சமா விழுங்கி வந்தா உணவு சீக்கிரமா ஜீரணமாகும். அதோட வாயுத் தொல்லையும் சரியாகும். சோம்பு பசியை தூண்டும் சிறந்த ஒன்றாகும்..

1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.

சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்க கூடிய சுகாதாரமற்ற,உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கலாம்.


சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

Previous Post Next Post