-->

கொள்ளு குருமா - Kollu Kuruma


தேவையான பொருட்கள்

முளைக்கட்டிய கொள்ளு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மசித்த உருளைக்கிழங்கு - ஒன்று
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
அரைக்க:
தேங்காய் - பாதி
முந்திரி - 6

தாளிக்க:

சோம்பு - ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
அலங்கரிக்க:
கொத்தமல்லித் தழை சிறிது

செய்முறை

1. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், முந்திரி சேர்த்து அரைத்து வைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைந்ததும் தூள் வகைகளை சேர்க்கவும்.
4. அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
5. எல்லாம் சேர்ந்து ஒன்றாக கொதித்ததும் கொள்ளை சேர்த்து வேக விடவும்.
6. கொள்ளு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
7. சுவையான கொள்ளு குருமா தயார். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்



Previous Post Next Post