-->

பாசிபயிறு தோசை Paasi Payiru Dhosai


தேவையான பொருட்கள்

  1. பாசிபயிறு – ½ கிலோ
  2. வெங்காயம் – 250 கிராம்
  3. சீரகம் – 3  டீஸ்பூன்
  4. பச்சைமிளகாய் – 2
  5. வெள்ளை பூண்டு – 6 பல்லு
  6. உப்பு தேவையான அளவு


செய்முறை

1. பாசிபயிரை முதல் நாள் இரவு ஊற வைத்து விடவும்.

2. வெள்ளைப்பூண்டை தோல் உரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

3. பாசிபயிறு, வெள்ளை பூண்டு மற்றும் உப்பு மூன்றையும் மிக்ஸ்யில் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதத்திற்கு நன்கு அரைக்கவும்.

4. வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
பச்சைமிளகாயையும் பொடிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒரு கப்பில் வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் சீரகம் இவைகளை கலந்து வைத்துக்கொள்ளவும்.

5. இந்த மாவை 1 கப் அளவிற்கு தோசை கல்லில் ஊற்றி, தோசை சுற்றுவதைப்போல் சுற்றி விடவும்.

6. பிறகு எண்ணெய் ஊற்றி இந்த மாவின்மேல் வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் சீரகம் கலவையைஐ தூவி விடவும்.

7. தோசை போல் நன்கு பொரிந்ததும் அதை திருப்பி போட்டு கொஞ்சம் பொரிய விட்டு இறக்கினால் சுவையான பாசிபயிறு தோசை ரெடி.


8. பச்சைமிளகாய் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post