-->

மக்காச் சோளப் பாயாசம் செய்வது எப்படி?

தேவையானப் பொருட்கள்:
  1. மக்காச் சோளம் – 2 கப்
  2. பார்லி அரிசி – 2 டீஸ்பூன்
  3. ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
  4. கேசரி பவுடர் – சிறிதளவு
  5. பனை வெல்லம்– தேவைக்கேற்ப
  6. முந்திரி,காய்ந்த திராட்சை - சிறிதளவு 

செய்முறை:
  1. நாட்டுச் சோளம் மற்றும் பார்லியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. பின் ஊறவைத்த சோளம்,பார்லியுடன் நீர் சேர்த்து மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு, அரைத்த மாவை வடிகட்டி மூலம் வடிகட்டி அதிலுள்ள சக்கைகளை நீக்கி விடவும்.
  4. பிறகு அந்தக் கலவையில் பனை வெல்லம் மற்று ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும். 
  5. சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து கொதித்தவுடன் முந்திரி திராட்சை சேர்த்து  இறக்கி பரிமாறினால் சுவையான மக்காச் சோள பாயாசம் ரெடி.

Previous Post Next Post