ஆண்கள் கையில் மச்சம்

கையில் மச்சம் உள்ள ஆண்கள்


வலது உள்ளங்கையில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு நல்ல நண்பர்கள் வட்டம் உண்டு.

 இடது உள்ளங்கையில்  மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு ஒரு சில காரியங்களில் எதிர்பாரா தோல்விகள் உண்டாகும்.

வலது கை கட்டைவிரலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் சமுதாயத்தில் செல்வாக்கு உடையவர்கள், மேலும் தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்.

வலது கை சுண்டு விரலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களின் கம்பீரமான தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.

வலது கை நடுவிரலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் லாபகரமாக தொழிலை நடத்த கூடியவர்கள்.

வலது கை மோதிர விரலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் நல்ல புத்திசாலியாக இருப்பார்கள்.

வலக்கை ஆள்காட்டி விரலில் மச்சம் உள்ள ஆண்கள் – வாழ்க்கையை பொய், புகட்டு இல்லாமல் நல்ல படியாய் வாழ வேண்டும் என விரும்புவார்கள்.

இடது கை சுண்டு விரலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவார்கள் பார்ப்பதற்கு அப்பாவியாக காட்சியளிப்பார்கள்.

இடது கை மோதிர விரலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் யாரையும் நம்பி வேலையை ஒப்படைக்க மாட்டார்கள்.

இடது கை நடுவிரலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் வசதி வாய்ப்புடன் வாழ்வார்கள்.

இடது கை ஆள்காட்டி விரலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் வாழ்க்கையில் முன்னேற கடுமையான உழைப்பை வெளிபடுத்த வேண்டியிருக்கும்.

இடது கை கட்டைவிரலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே இருக்கும்.

இடது புறங்கையில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் துஷ்டர்களை கண்டால் ஒதுங்கி விடுவார்கள்.

வலது புறங்கையில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் எல்லோரிடமும் விரோதத்தை ஏற்படுத்தி கொள்வார்கள்.

இவற்றையும் படிக்கலமே,