-->

ராகி பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி

ராகி உணவு வைகைகள்

ராகியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் எலும்புகள் பலமடையும்.அலர்ஜி,ஒவ்வாமை,போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

 தேவையானபொருட்கள்
  1. கேழ்வரகு மாவு – ¼ கிலோ
  2. வேர்க்கடலை - 100 கிராம்
  3. ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
  4. முந்திரி – 10
  5. சர்க்கரை - ¼ கிலோ
  6. நெய் – ½ கப்
  7. வெள்ளைப் பூசணி - 100 கிராம்
  8. பால் - ஒரு கப்

செய்முறை
  1. முதலில் கேழ்வரகு மாவை சுத்தம் செய்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் வறுத்த கேழ்வரகை  ஆறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த மாவை தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலந்து கொள்ளவும்..
  4. கடாயில் பாலை ஊற்றி, கொதித்ததும் நறுக்கிய வெள்ளை பூசணித் துண்டுகளைச் சேர்த்து, வேக வைக்கவும்.
  5. இதனுடன், சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும்.
  6. பின்னர் வேர்கடலை ,முந்திரி ,திராட்சை இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து அத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான ராகி பூசணிக்காய்  அல்வா ரெடி.

Previous Post Next Post