-->

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் ஒரு பார்வை

முதல் மூன்று மாதங்கள் 1-3

குழந்தையை வயிற்றில் சுமப்பது பத்து மாதம் என்று பொதுவாக சொன்னாலும் கர்ப்ப காலத்தை மூன்று மூன்று மாதங்களாகப் பிரித்துள்ளனர். இதைத்தான் ஆங்கிலத்தில் ட்ரைமெஸ்டர் (Trimester) என்கிறார்கள்.
1-3 மாதங்கள் வரையிலான காலத்தை ‘முதல் ட்ரைமெஸ்டர்’ எனவும், 4-6 மாதம் வரையிலான காலத்தை இரண்டாவது ட்ரைமெஸ்டர் எனவும், 7-10 மாதம் வரையிலான காலத்தை   ‘மூன்றாவது ட்ரைமெஸ்டர்’ எனவும் பிரித்துள்ளனர்.

முதல் ட்ரைமாஸ்டர் என்றால் என்ன


முதல் ட்ரைமெஸ்டரில் உருவாகும் குமட்டல், வாந்தி, மயக்கம் மற்றும் அதனால் உண்டாகும் சோர்வும் தான் முக்கியமான விஷயம். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் இந்த குமட்டலும், வாந்தியும் நின்றுவிடும். சிலருக்கு மட்டும் அது மேலும் தொடரும். முதல் ட்ரைமெஸ்டரில் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டால், பொய் கர்ப்பம், முத்துப்பிள்ளை கர்ப்பம் போன்றவற்றை தடுக்கலாம்.

முதல் ட்ரைமெஸ்டர் எனப்படும் முதல் மூன்று மாத காலத்தில் கருவானது, கருப்பையில் அழுத்தமாக பொருந்தியிருக்காது என்பதால் பெண்களின் உடல்நிலையை பொருத்து அதிர்வுகள் அதிகரித்தால் கரு கலைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த காலகட்டத்தில் வெகுதூரம் பயணம் செய்வது என்பது தவிர்க்கப்பட வேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் டூவீலர், ஆட்டோ, கார், பஸ், டிரெயின், விமானம் என எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உங்களுக்கு ரத்த கசிவு உண்டானால் பயணம் செய்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். முதல் மூன்று மாதங்களில் நீங்கள் ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், டவுன் சிண்ட்ரோம் பரிசோதனை போன்றவை செய்ய வேண்டும்.

கரு உண்டான முதல் மூன்று மாதத்தில் உடலுறவு கொள்ளலாமா?

இந்த முன்று மாதங்களில் உடல் அசதி, வாந்தி, குமட்டல் போன்ற காரணங்களால் உடலுறவு கொள்வதில் பொதுவாக ஆர்வம் இருக்காது. ஆனால் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை இருந்தால் தாரளமாக மேற்கொள்ளலாம். இது அவரவர் உணர்வு ரீதியான விஷயம். கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ரத்த போக்கு ஏற்பட்டிருந்தாலோ, ஆரோக்கிய குறைபாடு கொண்ட பெண்ணாக இருந்தாலே உடலுறவை கட்டாயம் சிறிது காலம் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் கருவானது, கருப்பையில் சரிவர பொருந்தியிருக்காது என்பதால் அந்த நேரத்தில் அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளது. உடலுறவு வைத்துக் கொள்வதால் கூட சில சமயங்களில் அபார்ஷன் ஆகலாம். அதனால் முதல் மூன்று மாதங்களில் மேற்கூறிய பெண்கள் உடலுறவை தவிர்ப்பது நல்லது.

முதல் மூன்று மாதங்களில் குழந்தைக்கு எந்த உறுப்புக்கள் எல்லாம் வளரும் தெரியுமா?

கரு உருவான முதல் மாதத்திலேயே நரம்பு மண்டலம் உருவாகத் தொடங்கி விடும். நாற்பது நாட்களில் முதுகுத் தண்டு, இதயம் ஆகியவை உருவாகி, ரத்த ஓட்டம் ஆரம்பித்து விடும்.

இரண்டாவது மாதத்தில் கருவின் இதயம் மெதுவாகத் துடிக்க தொடங்கும். கை, கால்கள், காதுகள் போன்றவை உருவாகிவிடும். மூன்றாவது மாதத்தில், முகத்தில் உள்ள வாய், மூக்கு போன்றவை வளர ஆரம்பிக்கும்.

முதல் மூன்று மாதத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

கல்சியம், வைட்டமின்கள், மினரல்கள், இரும்புசத்து உணவுகள் மற்றும் மாத்திரைகள் கட்டாயம் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல போலிக் ஆசிட் மாத்திரகைகள் கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். போலிக் ஆசிட்டானது பச்சை காய்கறிகள், கீரைகள், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றிலும், கல்லீரல், காராமணி போன்றவற்றிலும் மிகுதியாக காணப்படுகின்றன. சரியான எடையுடன் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில்  Google Play Store மற்றும்அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.




அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும். 

Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும். 
Previous Post Next Post