வயிற்று தொப்பையை குறைக்கும் எளிய வழி முறைகள்
இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க பெரும்
பாடுப்படுகின்றனர். அதற்காக மருத்துவர்களை சந்தித்து மற்றும் விதவிதமான மருந்துகளை
உட்கொண்டு பணத்தை செலவழிக்கின்றனர்.
இவ்வாறு தேவையற்ற வயிற்று தசையை குறைக்க கீழ்காணும்
இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
சரியாக சாப்பிடுதல்
சரியான முறையில் சாப்பிட்டால் 80% தேவையற்ற கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். இதற்க்கு
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றினால் போதும்.
நொறுக்கு தீனிகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் உடல் பருமன்
ஏற்படாமல் தடுக்கலாம். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
தண்ணீர்
தாகம், பசி போன்றவை ஏற்படும்போது நிறைய சர்க்கரை
கொண்ட உணவை சாப்பிட்டு உண்டு தங்களின் உடல் எடையை தங்களை அறியாமலேயே
அதிகப்படுத்திக் கொள்கின்றனர். இது பெரும் தவறு.
எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில்
வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒருநாளைக்கு குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி
தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளல்
வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சிகென்று ஒதுக்க வேண்டும். கடினமான
உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் குறைந்தது காலை மற்றும் மாலை வேளைகளில்
நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
சர்க்கரை
பொதுவாக கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை
தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கடைகளில் கிடைக்கும் சர்க்கரையானது சுத்திகரிப்பு என்ற
பெயரில் செயற்கை ரசாயனங்களை அதிகம் உபயோகிக்கின்றனர். இதை தவிர்ப்பது நல்லது.
சர்க்கரைக்கு பதில் இயற்கை முறையில்
கிடைக்கும் தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை
பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி உணவுகள்
உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும்
கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக
உள்ளது.
அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால்
சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால்
தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும். எனவே வைட்டமின் சி
நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்
பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவை கொழுப்பை கரைக்க உதவுகின்றன.
சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும்
காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான
தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து,
காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் கொழுப்பை
குறைக்கும் சிறந்த வழியாகும்.
காலை உணவு
காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க
உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது.
ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும்
போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது.
ஆகையால்
உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை
அதிகப்படுத்தி கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை
உண்ணலாம்.
தூக்கம்
உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமாகும்.
மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம் தேவை. உறங்காமல்
இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது.
இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக்
கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய
வாழ்வை வாழ முடியும்.

