இரவு தூங்கும் முன் குளித்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? - Expres Tamil

Header Ads

இரவு தூங்கும் முன் குளித்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா?


இரவு தூங்கும் முன் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் ?

நமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் தினமும் குளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால்தான் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும், புத்துணர்வோடும் இருப்போம்.ஆனால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது உங்களின் தூக்கத்தின் தரத்தையும், சுகாதாரத்தையும் மட்டும் உயர்த்தாமல் உளவியல்ரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

முகப்பருக்கள் வராமல் தடுக்கும்

நாள் முழுவதும் வெளியில் அலைந்துவிட்டு இரவு நேரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையுடன் அப்படியே சென்று தூங்கும்போது அது உங்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கலாம். எனவே இரவு தூங்கும்முன் குளிப்பது முகப்பருக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

அலர்ஜிகளை எதிர்க்கும்

பருவக்காலத்திற்கு ஏற்றார் போல அலர்ஜிகள் ஏற்பட்டால் வெளியில் நீங்கள் செல்லும்போது கிருமிகள் உங்கள் சருமம் மற்றும் உடையின் மூலம் உங்களை தொற்றிக் கொள்ளும்.

இந்த சூழ்நிலையில் நீங்கள் இரவில் குளிக்காமல் தூங்கினால் உங்கள் உடலில் இருக்கும் கிருமிகள் அலர்ஜியின் தாக்கத்தை அதிகரிக்கும். மேலும் இது தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான சருமம்

உங்கள் சருமம் சீராக இருக்க ஹார்மோன்களின் உற்பத்தி சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் உடலுறவில் ஈடுபடும் போது வெளிப்படும் ஹார்மோனும் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தியும் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும்.

எனவே இரவு நேரத்தில் குளிப்பது உங்கள் உடலின் மேற்புறத்தில் இருக்கும் ஹார்மோன்களை சுத்தம் செய்வதன் மூலம் ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும்.முடி ஆரோக்கியம்

இரவில் குளிப்பதால் அதிக பலனடைவது உங்கள் முடிதான். இது உங்கள் முடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள உதவுகிறது. மேலும் இரவு தலைக்கு குளித்து விட்டு காலையில் எழுந்தால் உங்கள் முடி மிருதுவாக இருக்கும். இரவில் குளித்து விட்டு தூங்குவது உங்கள் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்

1 comment:

  1. Night time la thalaiku kulichidu padutha mudi Ku nalathu. Manishanuku neck pain headache cold ethu thana ok konjam yosichidu podunga. Ungalala night thalaiku kulichidu padutha yethume aga thunu solla mudiyuma

    ReplyDelete