-->

இரும்பு சத்தை அதிகரிக்கும் முருங்கை கீரை பூரி



முருங்கை கீரையில் உள்ள இரும்பு சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் சோர்வு,இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை கீரை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பெண்கள் முருங்கை கீரையை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கர்ப்பபை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. வாரம் ஒரு முறை முருங்கை கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடல் பலம் பெரும்.

முருங்கை உணவுகள்

தேவையான பொருட்கள்
  1. கோதுமை மாவு – 2 கப்
  2. ரவை - 2 கரண்டி  
  3. முருங்கை கீரை – ஒரு பிடி
  4. உப்பு – தேவையான அளவு
  5. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
  1. முருங்கை கீரையை நன்கு சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவு எடுத்து அதனுடன் ரவை, உப்பு, சுத்தம் செய்த முருங்கை கீரை சேர்க்கவும்.
  3. பின்னர் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  4. ஒரு ஈர துணியை வைத்து மாவை மூடி வைக்கவும்.
  5. பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின் தேய்த்து சுட்டு எடுத்தால் சுவையான சத்தான முருங்கை கீரை பூரி ரெடி.


Previous Post Next Post