-->

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு மிளகு தோசை



கோடை காலத்தில் கேழ்வரகை அதிகளவு சேர்த்து கொள்வது உடல் சூட்டை தணிக்க உதவும். மிளகு சேர்ப்பதால் சளி,இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து உடலை பாதுகக்கப்படுகிறது.


தேவையான பொருட்கள்
  1. கேழ்வரகு மாவு - 1 கப்
  2. கோதுமை மாவு – ½  கப்
  3. வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது
  6. சீரகம் - 1 டீஸ்பூன்
  7. மிளகு – 1 டீஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. தண்ணீர்  - தேவையான அளவு

செய்முறை
  1. ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பின்னர் அதில்  வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம்,மிளகு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  3.  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்..
  4. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி எடுத்தால் சுவையான சத்தான கேழ்வரகு மிளகு தோசை ரெடி.


Previous Post Next Post