-->

அரைக்கீரையில் எவ்வளவு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது தெரியுமா?


உடலுக்கு அரணாகும் அரைக்கீரை

பொதுவாக அனைத்து கீரை வகையிலுமே மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் அடங்கியுள்ளன. முளை கீரை, அரைக்கீரை, சிறுகீரை, அகத்தி கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை இவையெல்லாம் நமக்கு மிக எளிதாக கிடைக்கும் கீரை வகைகள் ஆகும். நாம் இந்த பதிவில் அரைக்கீரையில் உள்ள சத்துக்களையும் அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கலாம்.

இது பேருக்குத்தான் அரைக்கீரை, ஆனால் அனைத்து சத்துக்களும் அடங்கிய முழுக்கீரையாகக் காணப்படுகின்றது. அரைக்கீரையில் தாமிர சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, மணிச்சத்து, புரதச்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. இக்கீரை மருத்துவத்தில் மிகவும் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.

அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்

1. பிள்ளை பெற்ற பெண்களுக்கு ஏற்ற உணவு அரைக்கீரையாகும். பிள்ளை பேற்றினால் ஏற்படும் உடல் சூட்டை குறைக்க அரைக்கீரை பயன்படுகிறது. மேலும், அரைகீரையில் உள்ள சத்துக்கள் தாய் பாலில் கலந்து குழந்தைகளுக்கு எவ்வித நோய்களும் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
2. அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜீரம், குளிர் ஜீரம், வாத ஜீரம், ஜன்னி, பாத ஜீரம், போன்றவை குணமாகும்.
3. அரைக்கீரை ஆரம்ப நிலையில் உள்ள மனநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
4. வாதநோய் உள்ளவர்கள் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.
5. அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது.
6. அரைக்கீரை தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும். சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் விரைவில் தோல் நோய்கள் குணமாகிவிடும்.
7. அரைக்கீரை சாறில் 1 கிராம் அரிசியை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.
8. அரைக்கீரை மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை குறைக்கும். பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும்.

9. ஆங்கில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளிலிருந்து நம்மை அரைக்கீரை காக்கிறது.
10. அரைக்கீரை உடல் வலிக்கு சிறந்த மருந்தாகும்.
இக்கீரை சற்று தித்திப்புச் சுவையை கொண்டது. உஷ்ண சக்தி கொண்டது. அரைக்கீரையுடன் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் உஷ்ணத்தை உருவாக்காது. மருந்துகள் உண்ணும் காலத்தில் இக்கீரை பத்தியமாகப் பயன்படுகிறது. இக்கீரையை எந்தவிதமான நோய்களுக்கும் உணவாகக் கொடுக்கலாம். இதனை நாள்தோறும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும்கூட உடலுக்கு எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்காது

Previous Post Next Post