Header Ads

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - தனுசு


குரு பெயர்ச்சி தனுசு ராசி


எப்போதுமே பிறருக்கு ஏதேனும் ஒன்றை போதித்துக் கொண்டே இருக்கும் தனுசு ராசி அன்பர்களே!

உங்களது எண்ணம் போலவே பெரும்பாலும் உங்களது நட்பு வட்டாரமும் விரிந்து இருக்கும். இப்படிப் பட்ட உங்களுக்கு இது நாள் வரையில் விரயஸ்தானத்தில் இருந்து சுப விரயங்கள் பலவற்றை தந்து கொண்டு இருந்த குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு ஜென்ம ஸ்தானமான 1ம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். அதாவது உங்களது ராசியிலேயே குரு பகவான் சஞ்சரிக்க உள்ளார். இதனால் முன்பு இருந்த முட்டுக்கட்டைகள் தளர்வடையும். எதையும் எளிதில் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். வீண் செலவுகள் கூட படிப்படியாகக் குறையும். எனினும், பண வரவில் ஏற்ற - இறக்கமான சூழ்நிலை காணப்படும். ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளப்பாருங்கள். பணம் வந்து விடும் என்ற எண்ணத்தில் எந்த ஒரு பெரிய முதலீடுகளையும் திட்டம் இடாதீர்கள்.

குரு பெயர்ச்சி தனுசு 2019 பலன்கள்

இந்த குரு பெயர்ச்சியில் சிலருக்கு மருத்துவச் செலவுகள் பெருமளவில் குறையும். குரு ஜென்மத்தில் இருந்தாலும் கூட குரு பார்வை உங்களுக்கு நன்மையை செய்யும் விதத்தில் தான் உள்ளது. அதனால் சோதனைகளை கடந்து நீங்கள் சாதனை செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் இது நாள் வரையில் இருந்து வந்த மனக்கவலைகள் குறையும். பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல்படுங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் தொடர்ந்தாலும் கூட அதனை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வந்தாலும் கூட எதிர்பார்க்கும் சம்பள உயர்வு கிடைக்க சற்றே தாமதம் ஆகலாம். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் நிச்சயம் முயற்சிக்கு உரிய நல்ல பலன் கிடைக்காமல் போகாது. 23.9.2020 இல் நடக்க இருக்கும் ராகு/ கேது பெயர்ச்சி உங்களுக்கு அந்த அளவிற்கு சாதகம் இல்லாத படி உள்ளது. இதனால் மேற்கண்ட தேதிக்குப் பிறகு கணவன் - மனைவி இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடம் உண்டு. குடும்ப உறுப்பினர்களையும் கூட அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். முடிந்த வரையில் மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் இருந்து கொள்ளுங்கள்.

பெண்கள்:

குடும்பத்தில் சிறு, சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் கூட பெரிய அளவில் பாதிப்புகள் இருக்க வாய்ப்பு இல்லை. எனினும், குடும்ப விஷயங்களை அந்நிய நபர்களிடம் பகிராமல் இருப்பது உங்களுக்கு நன்மை செய்யும். குரு பலம் இல்லாவிட்டாலும் கூட குரு பார்வையால் இந்த ராசியில் பிறந்த சில பெண்களுக்குத் திருமணம் நடந்தேறும். பணவரவு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். எனினும் பணம் கையில் வந்து சேராமலேயே பெரிய செலவுகளை திட்டமிட்டு மாட்டிக் கொண்டு விடாதீர்கள். மற்றபடி புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தேறும். பணி புரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கூட கிடைக்கப்பெறும். கடந்து போன நாட்களைப் போல அல்லாமல் நிச்சயம் இந்த குருப் பெயர்ச்சியில் சில நன்மைகளையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிலும் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். எனினும், சில நேரங்களில் அஜீரணக் கோளாறு ஏற்பட இடம் உண்டு. அதனால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள். எப்படிப் பார்த்தாலும் மருத்துவ செலவுகள் குறையுமே தவிர பெரிய தீமைகளுக்கு இடம் இருக்காது. காரணம் குரு ஜென்மத்தில் இருந்தாலும் கூட குரு பார்வை உங்களுக்கு நன்மையை செய்யும் விதத்தில் தான் உள்ளது.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பொருளாதார நிலையானது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தான் இருக்கும். எனினும் கொடுக்கல் - வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கணவன் - மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். எனினும் பெரிய அளவில் கெடுதிகள் ஏற்பட இடம் இல்லை. உற்றார் - உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை குறைத்தீர்கள் என்றால் புதிய கடன்களை தவிர்க்கலாம்.

தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இது நாள் வரையில் தொழிலில் இருந்த மந்த நிலை படிப்படியாகக் குறையும். எனினும் பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது உங்களுக்கு நன்மையை செய்யும். கமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கப்பெறும். முடிந்த வரையில் பெரிய முதலீடுகளில் ஈடுபடாமல் தவிர்க்கவும். அவ்வப்போது சின்னச் சின்ன விரயங்களை தவிர்க்க முடியாது தான். எனினும் அவற்றை எல்லாம் சமாளித்து இறுதியில் வெற்றி பெறுவீர்கள். மற்றபடி, வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்காது. ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி அடைவது என்பது உங்களது சாமர்த்தியம்.

உத்தியோகஸ்தர்கள்:

பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் தடை இன்றிக் கிடைக்கப்பெறும். பணியில் முன்பு இருந்த சுமை படிப்படியாகத் தளர்வடையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கப்பெறும். வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு சிலருக்கு அமையப்பெறும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். மொத்தத்தில் முன்பு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறும். சிலருக்கு ஊதிய உயர்வு மட்டும் தாமதம் ஆகி பின்னர் கிடைக்கலாம். எனினும் எதிர்பார்க்கும் இடமாற்றம் எல்லாம் வந்து சேரும்.

அரசியல்வாதிகள்:

பதவிகளை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடு பட வேண்டி இருக்கும். எனினும், சமூகத்தில் கௌரவம் நிலை பெற்று இருக்கும். எந்த ஒரு முயற்சியிலும் சில தடைகளைக் கடந்தே வெற்றி கிடைக்கப்பெறும். கட்சிப் பணிகளுக்காக சில சமயங்களில் கைக்காசை போட்டு நீங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற - இறக்கமாகத் தான் இருக்கும். எனினும் முன்பு இருந்து நெருக்கடிகள் அதிகம் இருக்காது.

விவசாயம் செய்பவர்கள்:

விவசாயிகள் ஓரளவு லாபத்தை அடைவார்கள். பழைய பாக்கிகள் கூட வசூல் ஆகும். பழைய கடன்கள் கூட அடைபடும். எனினும் சந்தையில் உற்பத்தி பெருக்கத்தின் காரணமாக பெரிய அளவில் லாபம் வராமல் இருக்கலாம். ஆனாலும் கூட குரு பார்வையால் உங்களது தேவைகள் அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். கால் நடை வளர்ப்பவர்கள் மட்டும் நல்ல லாபத்தை பெரும் வாய்ப்பு உண்டு. மற்றபடி, புதிய முயற்சிகளில் ஈடுபடும் சமயத்தில் நீங்கள் சிந்தித்து செயல்படுவது உங்களுக்கு நன்மை தரும்.

மாணவ - மாணவியர்:

கல்வி பயில நல்ல சூழ்நிலை இருக்கும். வாய்ப்பை பயன்படுத்தி படித்து முன்னேறப் பாருங்கள். பெற்றோர் - ஆசிரியர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். சில மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு ஏற்படும். இன்னும் சில மாணவர்களுக்கு அரசு வழியில் ஏதேனும் ஆதாயம் கிடைக்கப்பெறலாம். மொத்தத்தில் இந்தக் குரு பெயர்ச்சி, இந்த ராசியில் பிறந்த மாணவர்களுக்கு நன்மையை செய்யும் விதத்தில் தான் உள்ளது.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

எதிலும் நிதானமாக செயல் படுவது உங்களுக்கு நன்மையை செய்யும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்மந்தமான பாதிப்புகள் உங்களுக்கு வந்து போக இடம் உண்டு. சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் கூட உண்டாகலாம். உணவு விஷயத்தில் அதிகம் கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்வது நன்மை தரும். கணவன் - மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல திருப்பங்களை சிலர் சந்திக்க இடம் உண்டு. உற்றார் - உறவினர்களின் வருகை அவ்வப்போது மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்து வரும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது இந்தக் காலத்தில் உங்களுக்கு நன்மையை செய்யும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை இப்போதைக்குப் பயன் படுத்திக் கொள்வது நல்லது.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

எந்த ஒரு விஷயத்திலும் எதிர் நீச்சல் போட்டு நீங்கள் முன்னேறுவீர்கள். பணவரவு சுமாராகத் தான் இருக்கும். எனினும் முக்கியத் தேவைகள் நிறைவு பெறும். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டிய தருணம் இது. சிலருக்குப் புதிய கடன் கூட வசூல் ஆகும். குடும்ப உறுப்பினர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துவது நல்லது. முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகம் இருக்கும் என்பதால் நேரத்திற்கு உண்டு - உறங்க முடியாத நிலை காணப்படலாம். கொடுக்கல் - வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகையை கடனாகக் கொடுப்பதை அவசியம் தவிர்க்கவும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரித்தாலும் கூட பணியில் திறம்படச் செயல்படுவீர்கள். தேவை இல்லாத பயணங்களை முன்பே யூகித்துக் குறைத்துக் கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்துப் படிக்க வேண்டிய காலம் இது.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

இந்தக் காலத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். ராகு / கேதுக்களின் சஞ்சாரத்தால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் வந்து போக இடம் உண்டு. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் சென்றால் நல்ல பலன்களை ஓரளவு காணலாம். மற்றபடி முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் சிலருக்கு உண்டாக இடம் உண்டு. தொழில், வியாபாரத்தில் இருக்கும் போட்டி, பொறாமைகளை எல்லாம் சமாளித்து நீங்கள் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு முன்பு இருந்த தேக்க நிலை மற்றும் பணியில் இருந்த முரண்பாடுகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் உடல் நலக் குறைவு ஏற்பாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தீய நண்பர்கள் சகவாசத்தை தவிர்க்கப் பாருங்கள். இக்காலத்தில் அருகம்புல் சாற்றி விநாயகரை நீங்கள் வழிபட்டு வர நன்மைகள் மேலோங்கும்

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

இந்தக் காலம் குரு பகவான் அதிச்சாரத்தில் சஞ்சரிக்கும் காலம் ஆகும். இதனால் திடீர் பணவரவு உங்களை அதிகம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பத்தில் தடை பட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். பல விதங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பொன், பொருள் மற்றும் புதிய ஆடை - ஆபரணங்கள் சேரும். கடன்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொய்வு நிலை படிப்படியாக குணமாகும். எனினும், ராகு - கேதுக்களின் சஞ்சாரம் தொடர்ந்து சாதகமாக உள்ளதால் கணவன் - மனைவி இடையே நீங்கள் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார் - உறவினர்கள் உங்களுக்கு நன்மையை செய்வார்கள். நினைத்த காரியங்கள் உங்களது முயற்சிக்கு தக்க படி நல்ல படியாக நடந்தேறும். வெளியூர் செல்லும் வாய்ப்பு சிலருக்கு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், அனுகூலமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் கூட நன்மைகளுக்கு இடம் உண்டு. சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளுக்கு இடையே எதிர்பார்க்கிற லாபம் நல்ல படியாகக் கிடைக்கப்பெறும். எனினும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இது நாள் வரையில் தடை பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை இனி வரும் காலங்களில் நல்ல படியாகக் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் - ஆசிரியர்களின் பாராட்டை பெறுவார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்து வரும் காலம் இது. இதனால் பொருளாதார நிலை தொடர்ந்து உங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். முயற்சிக்கு தக்க வெற்றி உண்டு. பூமி அல்லது மனை வாங்கும் அமைப்பு சிலருக்கு ஏற்படும். சிலர் பழைய வாகனத்தை மாற்றுவார்கள். கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் இருந்து வந்த தேக்க நிலை படிப்படியாகக் குறையும். ஆரோக்கியத்தில் சிறு, சிறு பாதிப்புகள் அவ்வப்போது தோன்றி மறைந்தாலும் கூட பெரிய அளவில் பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு தான். கணவன் - மனைவி இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் கூட ஒற்றுமை சிறப்பாகத் தான் இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பல பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு இந்த சமயத்தில் கிடைக்கப்பெறும். மாணவர்கள் உடல் நலத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி, உங்களது முயற்சிக்கு தக்க நல்ல பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகாது.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

இக்காலத்தில் பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகம் இல்லாத நிலையில் காணப்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே வாக்கு வாதங்கள் அதிகரிக்க இடம் உண்டு. சுப காரிய முயற்சிகள் தடைகளை கடந்தே வெற்றி அடையும். பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது. முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. 23.09.2020 முதல் ராகு/ கேது பெயர்ச்சி உங்களுக்கு ஓரளவு சாதகம் தருவதாக காணப்படுகிறது. இதனால் உங்களது முக்கியத்தேவைகள் பூர்த்தி ஆகும். இதன் பிறகு தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தொழில் பிரச்சனைகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். மற்றபடி பயணங்களை திட்டமிட்டு செய்யாவிட்டால் நீங்கள் தேவை இல்லாத அலைச்சல்களை எல்லாம் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களை உயர் அதிகாரிகள் இனி வரும் நாட்களில் புரிந்து கொள்வார்கள். இதனால் உத்யோகம் பார்ப்பவர்கள் உத்யோக ரீதியாக சில நல்ல திருப்பங்களை சந்திப்பார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

ராகு / கேதுக்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால் மனதில் தைரியம் ஏற்படும். எனினும் மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லாத காரணத்தால் புதிய கடன்கள் உதயம் ஆவதை தடுக்க ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளப்பாருங்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடிந்தேறும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாமல் இருப்பது உங்களுக்கு நன்மையை செய்யும். பேச்சில் மட்டும் அதிக நிதானத்தை கடைபிடியுங்கள். முடிந்த வரையில் வீடு, மனை போன்றவற்றை வாங்கும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். உற்றார் - உறவினர்களை கூட அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய தருணம் இது. எனினும் அன்றாடப் பணிகளில் நீங்கள் திறம்படச் செயல் படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது நீங்கள் முன்னேறி விடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு தாமதம் அடையலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் கண்டிப்பாக உங்கள் முயற்சி வீண் போகாது. நிச்சயம் இக்காலத்தில் முயற்சிக்கு தக்க நற்பலனை நீங்கள் பெறுவீர்கள். மற்றபடி பெரும்பாலும் இந்தக் காலம் உங்களுக்கு நன்மையை தான் செய்யும்.

பரிகாரம்:

இந்தக் காலத்தில் குரு பகவானின் சஞ்சாரம் மத்திம அளவில் பலன்களை தரும் விதத்தில் உள்ளபடியால் வியாழக் கிழமைகளில் மஞ்சள் நிறம் கொண்ட பூக்களை கொண்டு இறை வழிபாட்டை செய்து வாருங்கள். உடன் நெய் தீபமும் ஏற்றி வாருங்கள். அதேபோல, வாய்ப்பு கிடைத்தால் சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு விரதம் இருக்கலாம். ராகு காலத்தில் துர்க்கையை அரளி சாற்றி வழிபட்டு வருவதும் நல்லது. இதனால் ராகு/ கேதுக்கள் நல்ல பலனை அளிப்பார்கள்.


வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி

ராசியான திசை : வட கிழக்கு

ராசிக்கல் : கனக புஷ்பராகம்

ராசியான கிழமை : வியாழன்

ராசியான நிறம் : மஞ்சள்

ராசியான எண்கள் : 1,3,9

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - தனுசு

எப்போதுமே பிறருக்கு ஏதேனும் ஒன்றை போதித்துக் கொண்டே இருக்கும் தனுசு ராசி அன்பர்களே! உங்களது எண்ணம் போலவே பெரும்பாலும் உங்களது நட்பு வட்டாரமும் விரிந்து இருக்கும். இப்படிப் பட்ட உங்களுக்கு இது நாள் வரையில் விரயஸ்தானத்தில் இருந்து சுப விரயங்கள் பலவற்றை தந்து கொண்டு இருந்த குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு ஜென்ம ஸ்தானமான 1ம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். அதாவது உங்களது ராசியிலேயே குரு பகவான் சஞ்சரிக்க உள்ளார். இதனால் முன்பு இருந்த முட்டுக்கட்டைகள் தளர்வடையும். எதையும் எளிதில் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். வீண் செலவுகள் கூட படிப்படியாகக் குறையும். எனினும், பண வரவில் ஏற்ற - இறக்கமான சூழ்நிலை காணப்படும். ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளப்பாருங்கள். பணம் வந்து விடும் என்ற எண்ணத்தில் எந்த ஒரு பெரிய முதலீடுகளையும் திட்டம் இடாதீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் சிலருக்கு மருத்துவச் செலவுகள் பெருமளவில் குறையும். குரு ஜென்மத்தில் இருந்தாலும் கூட குரு பார்வை உங்களுக்கு நன்மையை செய்யும் விதத்தில் தான் உள்ளது. அதனால் சோதனைகளை கடந்து நீங்கள் சாதனை செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் இது நாள் வரையில் இருந்து வந்த மனக்கவலைகள் குறையும். பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் செயல்படுங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் தொடர்ந்தாலும் கூட அதனை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வந்தாலும் கூட எதிர்பார்க்கும் சம்பள உயர்வு கிடைக்க சற்றே தாமதம் ஆகலாம். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் நிச்சயம் முயற்சிக்கு உரிய நல்ல பலன் கிடைக்காமல் போகாது. 23.9.2020 இல் நடக்க இருக்கும் ராகு/ கேது பெயர்ச்சி உங்களுக்கு அந்த அளவிற்கு சாதகம் இல்லாத படி உள்ளது. இதனால் மேற்கண்ட தேதிக்குப் பிறகு கணவன் - மனைவி இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடம் உண்டு. குடும்ப உறுப்பினர்களையும் கூட அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். முடிந்த வரையில் மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் இருந்து கொள்ளுங்கள்.
Book rating: 88 out of 100 with 20 ratings

No comments