கனவு பலன்கள் கட்டிடம்


பலவகையான கட்டிடங்கள் கனவில் வந்தால்


1.       அணைக்கட்டில் நீர் வழிவது போல் கனவு வந்தால் உங்கள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்று பொருள்.
2.       அணை உடைவது போல் கனவு வந்தால் நண்பர்கள் வழயில் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று பொருள்.
3.       ஆராய்ச்சிகூடத்தை கனவில் கண்டால், நீங்கள் செய்யும் புதிய முயற்சி வெற்றி அடையும்.
4.       ஆசிரமம் கனவில் வந்தால், உங்களின் மனம் அமைதி இல்லாமல் இருக்கிறது என்று அர்த்தம்.
5.       வீடு கட்டுவது போல கனவு கண்டால், உங்களுக்கு பல சோதனைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.
வீடு கனவு பலன்கள்

6.       சிறையை கனவில் கண்டால் அது உங்களுக்கு பிரச்சனை உருவாக போவதன் அறிகுறியாகும்.
7.       மருத்துவமனை கனவில் வருவது உங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு உள்ளதை குறிக்கிறது.
8.       நினைவுச் சின்னம் இருக்கும் இடத்தில நடப்பது நடப்பது போல் கனவு வந்தால், உங்களுக்கு ஏமாற்றம் வரப்போவதன் அறிகுறியாகும்.
9.       ஒரு குடிசை உங்கள் கனவில் வந்தால் ஏற்ற இறக்கமாக உள்ள பொருளாதார சிக்கல் விலக போகிறது என்று அர்த்தம்.
10.   வீட்டின் முகப்பில் தோரணத்தோடு கூடிய வாசல்படிகளை கனவில் வந்தால் நல்ல செய்தி வரப்போவதை குறிக்கும்.
11.   பாழடைந்த வீடு கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் வீணான குழப்பங்கள் ஏற்பட்டு துன்பம் உருவாக போவதன் அறிகுறியாகும்.
12.   புத்தம் புதிய கட்டிடம் கனவில் வந்தால் உத்தியோகத்தில் மாற்றம், நற்பலன் உண்டாகும் என்று அர்த்தம்.
13.   தொழிற்சாலை இருப்பது போல கனவு காண்பது உங்களுக்கு புது வியாபாரம் தொடங்க போவதன் அறிகுறியாகும்.
மாளிகை கனவு பலன்கள்