-->

உடல் எடையை குறைக்கும் கொள்ளு ரசம் வைப்பது எப்படி

உடல் பருமனை குறைக்கும் கொள்ளு

தேவையான பொருட்கள்

  1. கொள்ளு 1 சிறிய கப்
  2.  புளி - 50 கிராம்
  3.  மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  4.  தனியா  – 1 ஸ்பூன்
  5.  மிளகு - 1 ஸ்பூன்
  6.  சீரகம் - 2  ஸ்பூன்
  7.  தக்காளி 2
  8.  பூண்டு - 3 பல்
  9.  பச்சை மிளகாய் 2
  10.  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க


  1.  எண்ணெய் தேவையான அளவு
  2.  கடுகு – தேவையான அளவு  
  3. சீரகம் 1 ஸ்பூன்
  4.  காய்ந்த மிளகாய் - 1.

செய்முறை

  1.  கொள்ளை முதல் நாள் இரவு படுக்கும் முன் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. மறுநாள் காலையில் நன்கு ஊறிய கொள்ளை கழுவி வேக வைத்துக் கொள்ளவும்.
  3. கொள்ளு வெந்ததும் நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் மிக்சி ஜாரில் மிளகு, சீரகம், தனியா,பூண்டு,காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  5. ரசத்திற்கு தேவையான அளவு புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  6. கரைத்து வடிகட்டிய புளித்தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,தக்காளி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  7. பின் அதில் மசித்து வைத்துள்ள கொள்ளு ,அரைத்து வைத்துள்ள ரசப்பொடி சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  8. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,பெருங்கயத்தூள்,கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து தாளித்து கொட்டி சிறிது நேரம் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறினால் சுவையான கொள்ளு ரசம் ரெடி..



Previous Post Next Post