-->

முப்பத்து ஐந்து வயதுக்கு மேல் கர்ப்பமானவர்கள், கர்ப்பமாக நினைபவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

35 வயதுக்கு மேல் கர்ப்பம் 

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் குழந்தை பெறுவதை பலரும் தள்ளி போடுகிறார்கள். பொருளாதாரத்தில் மேம்படுவதற்காக திருமணத்தையும், குழந்தை பெறுவதையும் பலரும் தள்ளி போடுகிறார்கள். ஒரு சிலர் தனது இளமையை அனுபவிப்பதற்காகவும் குழந்தை பேற்றை தள்ளி போடுகிறார்கள். இவர்கள் குழந்தை பெறுவதை தள்ளி போடலாம்.  ஆனால் காலம் அவர்களுக்குகாக ஒரு போதும் காத்திருப்பதில்லை. இவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என நினைக்கும் தருணத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். அவை என்னென்ன சிக்கல்கள் என்பதை பின்வருவனவற்றில் காண்போம்.

35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றால் தாய்க்கும், குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்புகள்

குழந்தை பிறப்பதற்கு ஏற்ற பெண்ணின் வயது என்ன தெரியுமா?

பதினெட்டு முதல் 21 வயதுதான் பெண்ணிற்கேற்ற திருமண வயது என்று அரசாங்கம் சொல்கிறது. அதே போல 21 வயதிலிருந்து 35 வயது வரை தான் கருவுற நினைப்பவர்களின் காலகட்டம்.  அந்த வயதில் தான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்து கருவுருவதர்கேற்ற முதிர்ச்சியை பெற்றிருக்கும். ஏனெனில் அந்த சமயத்தில் தான் ஆரோக்கியமான சினைமுட்டைகள் பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளிவரும்.

35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றால் தாய்க்கும், குழந்தைக்கும் எந்த மாதிரியான பாதிப்புகள் உண்டாகும்?

35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருத்தறிப்பதர்கான வாய்புகள் குறைவாகவே இருக்கும். இதற்க்கு காரணம் சீரற்ற சினை முட்டைகள் வெளிபடுவதற்கான கால இடைவெளி அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். ஆனால் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல இவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

35 வயதுக்குப் பிறகு பெண்கள் கருத்தரித்தால் தாய்க்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறக்கும் குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு மனவளர்ச்சி குறைபாடுடன் கூடிய குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புண்டு.

கர்ப்ப காலத்தில் 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு ஏற்படும்  சிக்கல்கள்

1. 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
2. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எடை குறைவாக இருக்கும்.
3. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
4. இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்புகள் அதிகம்.
5. இவர்களுக்கு சுக பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் செய்ய வாய்ப்புகள் அதிகம்.
6. இவர்களின் குழந்தைகளுக்கும் உடல் நல கோளாறுகள் ஏற்பட வாய்புகள் அதிகம்.

ஒருவேளை குழந்தை பேற்றை தள்ளி போட வேண்டிய கட்டாயம் இருந்தால் குழந்தை பேற்றை தடுப்பதற்க்கென்று பல்வேறு கருத்தடை முறைகள் உள்ளன, அவற்றை பின்பற்றினால் குழந்தை பெறுவதை தள்ளி போடலாம். பொதுவாக குழந்தை பெரும் வயதை தள்ளி போடாதீர்கள்.  உரிய வயதில் குழந்தை பெற்று தாய்மையை அனுபவியுங்கள்.

இந்த பதிப்பானது மேலும் பல விளக்கங்களுடன் புத்தக வடிவில் Google Play Store மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த புத்தகமானது உங்களுக்கோ அல்லது உங்கள் மகள், மகன், நண்பர்கள், உறவினர்கள், கர்ப்பம் தரிக்க விரும்புவர்கள், கார்ப்பமானவர்கள் போன்றோர் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.



அமேசான் தளத்தில் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.  


Google Play Storeல் இந்த புத்தகத்தை பெற இங்கே click செய்யவும்.

Previous Post Next Post